பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

47 ஆருயிர் மருந்து இன்மையால் அப்பாத்திரத்தால் அங்கு யாது பயன் என்று நினைத்தான். தான் அதில் வரும் உணவினை உண்டு வாழத் தேவையில்லை என எண்ணி வருந் தினான். யாருக்கும் பயன்படாத அப்பாத்திரத்தில் வரும் உணவினைத் தான் மட்டும் உண்டு உயிர் வாழலாகாது என்று கருதிய ஆபுத்திரன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்க நினைத்தான். அதற்கு முன்னாகச் சிந்தா தேவி அளித்த அந்த நந்தாப் பாத்திரத்தை அருகி லுள்ள கோமுகி யென்னும் பொய்கையில் இட்டு, ஆண்டுக்கு ஒரு முறை அது வெளிவர வேண்டும் என வும், அப்போது யாரேனும் ‘அருளறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர் உளரெனில் அவர் கைப் புகுவாய்' எனவும் கூறினன். பின்னர் அப்பொய்கையின் பக்கலி லேயே உண்ணா நோன்பினை மேற் கொண்டான். அப் போது அறவண்வடிகள் அங்குச் சென்று அவன் பெற்ற பெருந்துயர் யாது எனக் கேட்க, அவன் எல்லாவற்றை யும் அவருக்கு உரைத்தனன். பின்னர் அவன் உயிர் துறந்து சாவக நாட்டினை ஆளும் அரசனது பசு வயிற் றில் மகனாகப் பிறந்தான். ♥ பெற்ற அப்பசு முன்னமே அவனைச் சாலிவிட்டுச் சென்ற போது பாதுகாத்த அந்தப் பசுதான். அவனைப் பாலூட்டிப் பாதுகாத்த அப் புண்ணியச் சிறப்பினால் சாவக நாட்டில் தவளமால் வரையினிடத்து வாழ்ந்த மண்முக முனிவன் தங்கிய சோலையில் பிறந்தது. அதன் கொம்பும் குளம்பும் பொன்மயமாக இருந்தன. கன்றைப் பெற்றெடுப்பதன் முன்னே கறவையாகித் தானே பற்பல விடங்களுக்கும் சென்று பால் சொரிந்து