46
ஆருயிர் மருந்து
தேவியை வணங்கி வரங் கொண்டு ஊர்தோறும்
சென்று உணவு உண்ண வாருங்கள் என அழைத்தான்.
ஆனால் எங்கும் அவனை இகழ்வோர் பலராயினர். நல்ல
வினையுள் பெருகிய பின் பிச்சை ஏற்பார் இல்லை. இந்
நிலையினை எண்ணிய ஆபுத்திரன் திருவின் செல்வம்
பெருங் கடல் கொள்ள, ஒரு தனியே வரும் பெருமகன்
போல் வருத்தம் அடைந்தான்.
அவன் வருந்தி யிருக்கும் கால் ஒரு நாள் கப்பலில்
வந்து இறங்கிய சிலர் அவனைக் கண்டு தூரத்தே உள்ள
சாவக நாட்டில் மழை இன்மையால் பலர் உணவின்றி
மடிகின்றார்க ளென்றும், உடனே அவன் அங்குப் புறப்
பட்டுச் சென்றால் அனைவரும் அவன் அளிக்கும் உண
வினைக் கொண்டு உயிர் பிழைப்பார்க ளென்றும் கூறி
னர். அவர்கள் கூறியதைக் கேட்ட ஆபுத்திரன் வறி
யோன் பெருஞ் செல்வம் பெற்றதைப் போன்று பெரு
மகிழ்வுற்று உடனே அந்நாட்டுக்குப் புறப்பட்டான்.
சாவக நாடு செல்லும் கப்பலில் புறப்பட்டான்
ஆபுத்திரன். கப்பல் கடலைக் கிழித்துக் கொண்டு
சென்றது. ஒரு நாள். அது
மணிபல்லவம் என்ற
தீவிடை நின்றது. கப்பலில் உள்ளார் சிலர் இறங்கி
அத்தீவின் நலம் காணச் சென்றனர். ஆபுத்திரனும்
சென்றான். அனைவரும் அத்தீவின் நலம் கண்டு திரும்
பினர். ஆபுத்திரன் சற்று உள்ளே சென்று விட்டான்
போலும். அனைவரும் வந்து விட்டார்கள்
என்று
எண்ணிய கப்பற் றலைவன் கப்பலைச் செலுத்திக்
கொண்டு நடுக் கடலுக்குச் சென்று விட்டான். பிறகு
கரைக்கு வந்து, கட்பல் சென்றதை அறிந்த ஆபுத்திரன்
செய்வதறியாது திகைத்தான். அத்தீவில் மக்களே