பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

45 ஆருயிர். மருந்து என்று அந்நாட்டு இழிவு தோன்றக் கூறி அவனை விளித்தான். மேலும் பசியென வருந்தி வந்தோர் தம் வாடியமுகம் கண்டு, அவர்கட்கு வேண்டிய உணவிட்டு, வயிறு நிரம்பப் பெற்ற பின் வாடிய முகம் மலரப் பெற அவனை வாழ்த்திச் செல்வோர் பலர். அம்மலர்ந்த முகம் காணும் வாழ்வு தேவ உலகில் கிடையாதே என்றான். மற்றும் இந்திரன் அளிப்பன யாவும் பல னற்றவையே என்று பரிகசித்தான். இவற்றையெல் லாம் கேட்ட இந்திரன் பெருஞ் சீற்ற முற்றான். பசி இருந்தாலன்றோ மக்கள் இவனை வந்து சோறு என்று வருந்திக் கேட்க, அவர்கட்டு உணவளித்து, அவர்தம் திருந்து முகத்தை இவன் காணப் போவது என நினைத்தான். நாட்டில் பசி உண்டாகாத படி நல்ல மழையினைப் பெய்வித்து விளைவினைப் பெருக்கிவிட்டால் இவனும் இப்பாத்திரமும் பயனற்று நிற்க, இவன் தனக்கு அகப்படுவான் என நினைத்தான். நினைத்து மழை பெய்யச் செய்தான். மணிபல்லவம் சேர்ந்தான் பாண்டிநாட்டில் பன்னிரண்டாண்டு பற்றியிருந்த பஞ்சம் நீங்க நல்ல மழை பெய்தது. வரண்டு பயிராகா திருந்த நிலன்களெல்லாம் நல்ல பயனைத் தந்தன. விளைவு ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிற்று. மக்கள் நிறைய உணவைப் பெற்றார்கள். எனவே ஆபுத்திரனை அண்டி உண வுண்டோ’ என்று வேண்டுவார் இல ராயினர். வருந்திய ஆபுத்திரன் வருவோர் இலரே என்று எண்ணி அப்பாத்திரத்தைத் தான் கையிலேந் திக் கொண்டு ஊர் தொறும் சென்று உண்பார் உள ரோ என்று காண விரும்பினான். அவ்வாறே சிந்தா . 4