பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து உண்டோ என்று கேட்டுக் கேட்டு அனைவருக்கும் பாத்திரத்திலிருந்து சோற்றினை வாரி வாரி அளித்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியது. இவ்வுலகில் மட்டுமன்றி தேவ உலகினுக்கும் சென்றது அவன் புகழ். தெய்வ உலகத்தின் தலைவனாகிய இந்திரன் இவன் செயலைத் தன் பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்து கொண்டான். பாண்டு கம்பள மென்பது வெள்ளைக் கம்பளம் போர்த்த இந்திரனுடைய ஆசனம் போலும். இவ்வுலகில் நல்லறம் செய்து பெருநிலை பெறினும். அதனால் இந்திரர்க்கு அல்லல் உறினும் அந்த ஆசனம் நடுங்கும் என்பது பௌத்த தர்மக் கொள்கை போலும். நடுக்கத்தின் காரணத்தை அறிந்த இந்திரன் கிழ அந் தணர் வேடம் கொண்டு மாயிருஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் முன்னே தோன்றினான். எதிரில் வந்து நின்ற இந்திரனை நோக்கினான் ஆபுத் திரன். இந்திரனும் தான் இன்னானென்று கூறி அவன் தானத்தின் பலனைத் தன்னிடத்திலிருந்து கொள்ளு மாறு கூறினான். அவன் கூறியதைக் கேட்ட ஆபுத் திரன் விலா ஓடியச் சிரித்தான். தெய்வலோக வாழ் வைப் பற்றி எள்ளி நகை யாடினான், " ஈண்டுச் செய்வினை யாண்டு நுகர்ந்திருத்தல் காண்தகு சிறப்பினும் கடவுளர் அல்லது அறஞ் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் நற்றவம் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்கு இறைவ னாகிய பெருவிறல் வேந்தே'