43
ஆருயிர் மருந்து
தங்கட்குப் பெரும் பசி உண்டென்றும் அதன் வருத்
தம் நீ'ங்க ஏதேனும் உணவளிக்கவேண்டும் என்றும்
வேண்டிக்கொண்டனர். ஆனால் பிச்சையேற் றுண்
ணும் வழியன்றி, வேறு வகையில் வாழாத அவன்
செய்வதறியாது திகைத்தான், தான் பிச்சையேற்றுக்
கொண்டு வந்ததை மாலையே மற்றவர்களுக்கு இட்டுத்
தானும் உண்டு விட்டான். வேறு வழியில்லை என்று
எண்ணி வருந்திக்கொண் டிருக்கையில் சிந்தாதேவியின்
திருக்கோயிலில் பேரொளி புகுந்தது. ஒளி வந்த திசை
கோக்கினான் ஆபுத்திரன் ; சிந்தாதேவி அவன் முன்னே
நின்றிருந்தான். அவன் கையிலே ஒரு பாத்திரத்தைக்
கொடுத்து அத்தெய்வம்,
‘ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
நாடு வறங் கூறினும் இவ்வோடு வறங்கூராது
வாங்குநர் கையகம் வருத்தல் அல்லது
தான் தொலை வில்லாத் தகைமையது'
என்று சொல்லிற்று. அதுகண்ட ஆபுத்திரன் தன்னை
மறந்து, பிறர் துயர் களையும் பெரியாளாகிய அச் சிந்தா
தேவியைப் பல் வேறு வகையில் பரவிப் போற்றினான்.
பின்னர் அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவினை
அப்பாத்திரத்திலிருந்து வாரி வாரி வழங்கினான். அப்
பாத்திரத்தில் உள்ள உணவோ எடுக்க எடுக்கக் குறை
யாது வளர்ந்து கொண்டே வந்தது. அனை வரும்
வியந்தனர்.
தெய்வலோக வாழ்க்கை
பெற்ற பாத்திரத்தைக் கையிற் கொண்டு ஆபுத்
திரன் அந்நாடு முழுதும் சென்று, பசித்திருப்பார்