பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

42 ஆருயிர் மருந்து பிழைப்பட்டவன் என்பதை அறிந்த காரண த்தால் அவ னைத் தன் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறிவிட் டான். பிச்சையெடுத்தேனும் வாழலாம் என்று நின்ற அச்சிறுவனது பிச்சைப் பாத்திரத்திலே அப் பார்ப் பனர் கல்லிட்டுத் துன்பம் செய்தனர். ஆகவே அவர் கள் துன்பம் பொறுக்காது அவ்வூரையே விட்டு, தென் மதுரை சென்று சிந்தாதேவியின் திருக்கோயிலினுள் தங்கினான். அங்கிருந்த செழுங்கலை நியமத்து வாயிலில் தங்கி அவ்வூரில் பலவிடங்களிலும் பிக்சையேற்று வந் தான். ஏற்ற பிச்சையை தான்மட்டும் உண்ணாது, 'காணார் கேளார் கான்முடம் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்’ ஆகிய யாவரையும் வருக என்று அழைத்து அவர் களுக்கும் இட்டு, மிகுதி இருப்பதைத் தானும் உண்டு காலம் கழித்து வருவானாயினன். பாத்திரம் பெற்றது பிச்சைக்காரனாக இருந்த அச்சிறுவன் பின் எப் படி வற்றாத பாத்திரம் பெற்று உலகம் போற்றும் புகழ் பெற்றான் என்பதை அறிய ஆவல் கொண்டனர் மணிமேகலையும் மற்ற இருவரும். எனவே அறவண அடிகள் மேலும் சொல்லலானார், பிச்சையேற்றும், பிறரை உண்பித்துத் 'தானும் உண்டு வாழ்ந்த அச்சிறுவனுக்கு மேலும் நலம் உண் டானதைக் கேள் என்றார். ஒரு நாள் பெருமழை பெய் தது. மழைக்குப்பின் இருட்டிவிட்டது. நடு இரவிலே ஒரு சிலர் ஆபுத்திரன் தங்கியிருந்த அந்த மண்டபத் துக்கு வந்தார்கள். வந்து உறங்கும் அவனை எழுப்பித்