ஆருயிர் மருந்து
41
மற்றவர் மேலும் சினம் கொண்டனர். சிறுவனோ
அமைதியாக அப்பசு செய்த கொடுமை யாது என்று
கேட்டான்.
'இருநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை'
என்று அச்சிறுவன் கேட்கவும் அவனைப் பழித்தனர்
வந்தவர். 'பிரமதேவன் அருளிய வேள்வியின் திறத்தை
இகழ்ந்து நீ அந்தப் பசுவினை மீட்ட காரணத்தால் நீ
பசு மகன் என்னப்படுவாயே யன்றி மனித மகனாக
மாட்டாய்' என்றனர். அது கேட்ட சிறுவன் நகைத்து.
மான் மகன், புலி மகன், நரி மகன் ஆகியோர் சிறந்த
தவசிகளாகிய அவ்வந்தணரால் போற்றப்படுவதை
உரைத்து, தான் பசு மகன் என்பதால் தாழ்ந்து
விடவில்லை என்று கூறினான். அதற்குள் அந்தக் கூட்டத்
தில் இருந்த ஒருவன் முன்வந்து அனைவரிடத்தும்
அச்சிறுவன் வரலாற்றைக் கூறினன். ஒழுக்கங் கெட்ட
சாலி என்ற பார்ப்பனியின் மகன் என்பதையும், கொற்
கைக்குக் காத தூரத்திலே அவன் பிறந்து, பசுவினால்
காக்கப்பட்டு பின் அவ்வூர் அந்தணனால் கொண்டுவரப்
பட்டதையும் கூறினன். கூறியபின் அவனைப் புலை
மகன் என்று அனைவரும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்
றான்.
அனைவரும் அவனை விட்டு நீங்கினர். அது வரை அவனை வளர்த்த பூதி என்னும் அந்தணனும் அவன்