பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

40 ஆருயிர் மருந்து கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து 'ஆ மகன் அல்லன் என்மகன்' என்று சொல்லி அக்குழந்தையை எடுத்துக் காதலி தன்னிடம் கொடுத்தான். அவளும் அன்போடு குழந்தையை ஏற்று ஊர் சென்று வளர்த்து வருவளாயினள். அவர்கள் தம் ஊரில் சென்று குழந்தை வளர வளர, அந்தணர்குலச் சடங்குகளை யெல்லாம் விதிமுறை தவறாது செய்து, பூணுல் அணி வித்துச் சிறப்புற வளர்த்து வருவாராயினர். சிறுவன் நன்கு பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தான். அந்த நாளிலே அவ்வூரில் வேள்வி ஒன்றைச் செய்ய அந்தணர் முயன்றனர். அவ்வேள்வியில் பசு வினைக் கொல்வார்கள் போலும். அதற்கெனக் கொண்டுவரப்பட்ட பசுவொன்று, கழுத்தில் மாலை யோடு தன் இறுதி வேளையை எண்ணி ஏங்கிக் கிடந்தது. வேடர் வலையிற் சிக்கிய மான் போல் வருந்திய அந்தப் பசுவினை எப்படியும் மீட்க வேண்டும் என்று கருதிய அச்சிறுவன் இரவில் ஒருபுறத்தே மறைந்திருந்து, அப்பசுவை பற்றிக் கொண்டு தனியாகப் புறப்பட்டுக் காட்டுவழியே செல்வானானன். பின்னர் யாகத்துக்கெனக் கொண்டுவந்த பசு வினைக் காணமுடியாது போனமையினாலே, கவன்ற பார்ப்பனர் அப்பசுவினைத் தேடலாயினர். காட்டு வழியில் பசுவுடன் சென்ற அச்சிறுவனைத் துன்புறுத் தினர். 'நிகழ்ந்ததை உரையாய் புலைச் சிறுமகனே, போக்கப் படுதி' என்று சொல்லிக் கோல்கொண் டடித் தனர். அவருள் உயர்ந்த பெரியான் ஒருவனது கொடு மையைக் கண்ட பசு, அவனை வயிற்றிடை முட்டிக் கொன்று காட்டினுள் ஓடிவிட்டது, அது கண்டு