பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

39 ஆருயிர் மருந்து அதை வைத்திருந்த ஆபுரத்தின் வரலாற்றையும் அறிய விரும்பினாள் மணிமேகலை. அவள் உளக் குறிப்பறிந்த அறவண அடிகள் ஆபுத்திரன் வரலாற்றைச் சொல்ல லானார். வாரணாசி என்பது வடபுலத்தே உள்ள ஓர் ஊர். அவ்வூரில் வேதம் ஓதும் விழுமிய குலத்தில் பிறந்தவன் அபஞ்சிகன் என்னும் அந்தணன். அவனுடைய மனைவி சாலி என்னும் பெயரினள். அவள் பெண்களுக்கே உரிய காப்புக்கடை கழிந்து கற்பிழந்தாள். அதன் காரணமாகக் கருப்ப முற்றாள். ஆயினும் பின்னால் தான் செய்த தவறு அறிந்து வருந்தினாள். பாவத்தின் கழுவாயாகக் குமரியம் பெருந்துறை சென்று தீர்த்த மாடினாள். தீர்த்தமாடித் திரும்பி வரும்போது கருப்ப முதிர்ந்து மகப் பெறு காலம் அண்மிற்று. ஓர் ஆண் மகனையும் பெற்றாள். பெற்ற குழந்தையின் மீது இரக் கம் காட்டாது, அது தன் பாபத்தின் சின்னமாதலைப் பார்க்க விரும்பாதவளாகிய சாலி என்னும் அப் பெண், அதை அங்கேயே ஒரு பொழிலிடை விட்டுவிட்டுத் தன் வழியே செல்வாளானாள். அக்குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. தூரத்தே மேய்ந்த ஒரு பசு அக் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, அதன் அண்மையில் வந்து தன் நாவால் நக்கி, தன்பாலையும் உண்பித்தது. அவ்வாறே ஏழு நாள் அக் குழந்தையைப் பசு பாது காத்தது. நிற்க, வயனங்கோடு என்னும் ஊரில் வாழும் பூதி என்னும் அந்தணன் தன் மனைவியோடு அவ்வழியே வந்தான். வந்த அவன் அக்குழந்தையைக் கண்டான். அதன் குரலைக் கேட்டான். அழகை அறிந்தான்