பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

38 ஆருயிர் மருந்து வருமோ என்று எண்ணிக் காலம் கழிப்பதோடு, அவ் வண்ணலைப் பிறவி தோறும் போற்றித் தான் வழி படுவதாக அறவண அடிகள் கூறினர். மணிமேகலைக்கு இவற்றைக் கூறியபின் அடிகள் மணிமேகலை மேல் செய்யவேண்டியதைப் பற்றியும் வற்புறுத்தலானார். உடனிருக்கும் மாதவியும், சுதமதியும் சென்ற பிறவியில் பாதபங்கய மலையை வழிபட்ட காரணத்தால் மேலும் மணிமேகலையுடனே தொடர்ந்து பிறந்து புத்ததேவனை வழிபட்டு, துயர் நீங்கப் பெற்று, பின் நிலைத்த முத்தி யை அடைவார்கள் என்றும் கூறினார். மேலும் மணி மேகலையை நோக்கி நீ இந்நகரில் ஆற்றப்போகும் செயல்கள் பல உள், அதன் பிறகுதான் உனக்கு நான் கூறப்போகும் பொருளுரை விளங்கும். ஆகவே முத லில் நீ உன் பாத்திரம் கொண்டு, உலகினுக்குத் தேவை யான ஆருயிர் மருந்தினை அளிப்பாயாக என்று அறி வுறுத்தினார். மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிபின் ஓரற முரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் ஒன்றே யாவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர்—என்றனர். அதைக்கேட்ட மணிமேகலையும் அவ்வாறே நல்லறத் தை மேற்கொள்வேன்' என்று கூறினள். " ஆபுத்திரன் வரலாறு அறம் தொடங்குமுன் அந்த ஆருயிர் மருந்தளிக் கும் அமுதசுரபியைப் பற்றிய முழு வரலாற்றையும்,