பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

1 37 ஆருயிர் மருந்து இவர். அது பழ வினையின் பயன் என்று தேற்றினாராம், இவற்றைக் கூறி அவ்வாறு இறந்த அவ்விருவரும்தான் தற்போது மாதவியாகவும், சுதமதியாகவும் வந்துள்ள னர் என்பதையும் கூறினர். தேவதோற்றமும் பாவமாற்றமும் அவர் தம் வரலாற்றைக் கூறிய அறவணவடிகள் அன்றைய உலக நிலையையும் அடுத்து வரும் நிலையை யும் சொல்லி, மேல் மேகலை உலகுக்குச் செய்யவேண் டிய தொண்டினையும் விளக்குவாரானார். இவ்வுலகில் பௌத்த தருமங்கள் குறைந்த காரணத்தால் கொடு மைகள் மிகுகின்றன வென்றும், அதைக் கூடுமான வரையில் மாற்ற எண்ணியே தாம் அறமுரைத்து வரு வதாகவும் உரைத்தார். எனினும் உலக மக்கள் உண் மையில் அறநெறியை நன்கு உணர்ந்து கொள்ளவில்லை; என்றாலும் அவற்றை உணரும் காலமும் வராமற் போகாது. தேவன் மீண்டும் பிறந்து மக்களை நல்வழிப் படுத்தும் வழியில் பணியாற்றுவன். அவன் தோன் றும் காலத்திற்குப் பின் யாவரும் அருளற வழியே கருத்தைச் செலுத்திச் செயலாற்றுவர். அப்புத்த ஞாயிறு தோன்றும் காலத்து பல நன்னிமித்தங்கள் நிகழும். நாளும் கோளும் நடுக்கம் நீங்கித் தம் தம் வழியில் தவறாது பணியியற்றும். நல்ல மழை வளமும் விளை வளமும் பெருகும். உயிர்கள் துயரற்றுச் செம்மை வாழ்வில் வாழத் தொடங்குவர். மக்கள் மட்டுமின்றி தேவரும் நரகரும், விலங்கும் புள்ளும் யாரும் யாவும் தத்தம் தீச்செயல் ஒழித்து, செம்மை வழியில் நின்று துன்பம் நீங்கி இன்ப வாழ்வில் வாழத் தலைப்படுவார் கள். அத்தகைய அண்ணல் தோன்று நாள் என்று