பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து அறவணர்த் தொழுதாள் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய மூவரும் அறவண அடிகள் எங்கே உள்ளார் என்று தேடுவரா யினர். முடிவில் அவர் இருக்குமிடத்தை அறிந்து, அவரிடம் சென்று வணங்கினர். மூவரும் வணங்கிய பின் அமர்ந்தனர். பின்னர் மணிமேகலை தன் வரலாற் றை எல்லாம் கூறினள். தான் மலர் வனஞ் சென்ற தும், உதயகுமரனைக் கண்டதும், அதனால் இரவு அங்கே தங்கியதும், பின் மணிமேகலா தெய்வத்தின் வழி மணி பல்லவம் சென்றதும், அங்கு புத்த பீடிகை கண்டு பழம் பிறப்புணர்ந்ததும், தீவதிலகையால் பாத்திரம் பெற்ற தும், பாத்திரம் பற்றிய வரலாற்றை அடிகள் மூலம் அறிக என்று அவள் சொன்னதும், மூன்று மந்திரங் கள் உபதேசிக்கப் பெற்றதும் ஆகிய அனைத்தையும் கூறினள். அது கேட்ட அறவணவடிகள் மிக மகிழ்ந் தனர். பின்னர் முன்னே தாரையும் விரையும் மடிந்த நிலையையும் கூறினர். அறவணவடிகள் அறவாழி அந்தணன் பாதம் தொழப் பல இடங்களுக்கு யாத்திரை செய்பவர். அவர் ஒரு சமயம் பாத பங்கய மலையை வழிபடச் சென்றவர், வழிபட்டுத் திரும்பி வரும் வழியில் துர்ச்சய ராசனைக் கண்டாராம். கண்டு ' உன் தேவியர் நலமோ' என்று கேட்க, அவன் மிகவும் வருந்தி, வீரை மதுவின் மயக்கத்தால் யானையின் முன் சென்று மடிந்ததையும், அவள் மடிந்ததை அறிந்த தாரை தன் மாளிகை உப் பரிகையி லிருந்து வீழ்ந்து இறந்ததையும் கூறினானாம்.