பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

50 ஆருயிர் மருந்து தாள். ஆம்! அனை வருக்கும் வற்றாது வாரி வழங்கும் அப்பாத்திரம் மணிமேகலை கையை அடையும்போது காலியாக உணவற் றிருந்தது. ஆகவே அதில் எடுத் துக் கொடுக்க ஒன்றும் இல்லை. எனினும் நல்லறஞ் செய்யும் தூய உள்ளமும் நற்சொல்லும் நற்பண்பும் நிறைந்த மங்கை நல்லாள் 'நாடு வாழ்க'என்று வாழ்த்தி அதில் பிச்சை இடுவாளாயின் பின்னர் அது எடுக்கக் குறையாது பெருகிக் கொண்டிருக்கும் போலும். இதை அறிந்த அறப்பெருஞ் செல்வி மணிமேகலை அம்மாநகர்த் தெருவு தோறும் நல்லார் அளிக்கும் பிச்சையேற்பதற் காகப் பிக்குணிக் கோலத்தோடு சுற்றி வருவாளானாள். மணிமேகலை பிக்குணிக் கோலத்தோடு கையில் பிச் சைப் பாத்திரத்தை ஏந்தி அந்நகர்த் தெருவு தொறும் செல்லும் காலை அவளைக் கண்ட மக்கள் கருத்தழிந் தனர். அரச குமாரனாகிய உதய குமரன் கண்டு விரும் பிய இவள் — அவன் உள்ளக் கோயிலில் குடிகொண் டிருக்கும் இவள்-இப்படிப் பிச்சை எடுக்கின்றாளே என்று பேசி வியப்பெய்தினர். அவர்கள் கூறியதை ஒன்றும் செவியில் ஏற்றுக் கொள்ளாது, மணிமேகலை 'இப்பிச்சைப் பாத்திரத்தில் கற்புடை மாதர் இடும் பிச் சையை ஏற்றுக் கொள்வேன்' -என்று சொல்லிக் கொண்டே தெருவில் நடந்தாள். அப்போது காய சண்டிகை என்னும் கந்தருவமாது ஒருத்தி அவள் முன் வந்து நின்றாள். நின்று 'வான்தரு கற்பின் மனையுறை மகளிரில், தான் தனி ஓங்கிய தகைமைய ளன்றோ. ஆதிரை நல்லாள்' என்று கூறி, மணிமேகலையை அவ ளிடம் சென்று பிச்சை ஏற்குமாறு கேட்டுக்கொண்' டாள். »