பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 51 ஆதிரை வரலாறு ஆதிரையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள விரும்பினாள் மணிமேகலை. அதை அறிந்த விஞ்சை மகளாகிய காயசண்டிகை அவள் வரலாற்றையும் சிறப் பையும் சொல்லுவாளானாள். ‘ஆதிரை என்பாள் சிறந்த கற்புடையவள். அவள் கற்பினை உலகம் அறிந்து போற்றக் கூடிய ஒரு செயல் நிகழ்ந்தது. அவள் கணவ னாகிய சாதுவன் என்பான் தீநட்புடையனாகி, கணிகை ஒருத்தியொடு வாழ்ந்து, பெற்ற செல்வத்தை யெல்லாம் இழந்து விட்டனன். அக்கணிகையும் அவன் பொரு ளற்றவன் என்ற காரணத்தால் புறக்கணித்தாள். அவன் மனம் வருந்தி, அக்காலத்தில் புறப்பட்ட ஒரு கப்பலில் செல்லும் வணிகர்களோடு தானும் புறப்பட் டுச் சென்று பொருள் சம்பாதித்துத் திரும்பி வரு தற்கு நினைத்து புறப்பட்டான். ஆனால் ஏறிச் சென்ற கப்பல் நடுக்கடலில் நாசமுற்று அழிந்தது. அழிந்த கப்பலில் தங்கிய பலரும் மாய்ந்தனர். சாதுவன் அருகே உள்ள ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றி ஊர்ந்து சென்று, உடைந்த அந்த இடத்தின் அருகிலுள்ள நாகா வாழ் நாட்டைச் சேர்ந்தான். அக்கப்பலி லிருந்து வேறு முயற்சிகளால் தப்பிய வர்கள் திரும்பி நாடு வந்து, கப்பல் அழிவுற்றதையும் சாதுவன் உள்ளிட்ட பலரும் அழிந்ததையும் கூறினர். அதுகேட்ட இவ்வாதிரை நல்லாள் மிகவும் வருந்திச் சுற்றத்தார் அனைவரையும் அழைத்துத் தான் மேலும் உயிர் வாழ விரும்பாத் தன்மை கூறித் தீ வளர்த்தச் சொல்லி அதில் வீழ்ந்து இறக்கப் போவதாகவும் கூறினள். அவள் சுற்றத்தாரும் அவ்வாறே தீ வளர்த் R ja Muthiah Research Library Brd Cross Road, CPT Campus Taravani, Chennai - 600 113