52
ஆருயிர் மருந்து
தனர். அவள் தீப்புகும் சிறப்பினைக் காண நகரமக்கள்
ஒரு சேரக் கூடி விட்டனர். ஆதிரை தூய நீரில் மூழ்கி
கணவன் சென்றவழித் தானும் செல்வேன்' என்று
கூறிக் கொண்டு, அத்தீயிடைப் புகுந்தாள்.
தீயிடைப் புகுந்த செல்வியை அங்கியங்கடவுள்
ஒன்றும் செய்யவில்லை. அவள் ஆடை தீப்பிடிக்க
வில்லை. வெம்மை அவளை வருத்தவில்லை. சூடிய மலர்
மாலைகள் தீய்ந்து கருகவில்லை. விரைமலர்த் தாமரை
யொருதனி இருந்த, திருவின் செய்யோள் போன்று'
சிறக்க இருந்தாள். எனினும் அவள் உள்ளம் சுட்டது.
'ஐயோ, தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன், யாது
செய்வேன்' என்று கூறி ஏங்கினாள். அதே வேளையில்
வானிலிருந்து ஒரு ஓசை வந்தது. அனைவரும் வியந்
தனர். அது சாதுவன் இறக்கவில்லை என்றும், நாகர்
மலையில் நலமே இருக்கிறான் என்றும், சில ஆண்டுகளில்
அப்பக்கம் செல்லும் சந்திரதத்தன் என்னும் வணிகனின்
கப்பல் மூலம் வீடு வந்து சேர்வானென்றும், அதுவரை
ஆதிரை ஆற்றியிருக்க வேண்டும் என்றும் கூறிற்று.
அதுகேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். ஆதிரையோ
நெருப்பை விட்டு, 'பொய்கை புக்கு ஆடிப் போதுவாள்
போன்று' வெளிவந்து வீடுசென்று கணவன் வரும்
நாளை நோக்கிக்கொண்டிருந்தாள்.
நாகர் மலையில் சாதுவன்
இனி நாகர் மலையில் சாதுவன் என் ஆனான்
என்பதைக் காணல் வேண்டும். கடலில் நீந்திக் கரையை
அடைந்ததும், வந்த அயர்ச்சி மிகுதியால் அப்படியே
ஒருமர நிழலில் படுத்து உறங்கிவிட்டான். அப்போது
அந்த மலையில் வாழ்கின்ற நாகர் பலர் அவனைச் சுற்றிச்