பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

54 ஆருயிர் மருந்து அறிவுடை மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கி நல்லறம் புரிந்து நல்லுலகடைந்த வரலாற்றை எல்லாம் கூறினான்.

  • மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்

சயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் கலைத்தனர் கண்டனை யா’ வென்று சாதுவன் விளக்கினான். இவற்றை யெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நாகர் வியந்தனர். தலைவன் வியப்புற்று மேலும் சில அறிந்து கொள்ள விரும்பினான். உடலைவிட்டுச் செல்லும் உயிர் மேலும் பிறிதோரிடம் செல்லும் என்று று சாதுவன் கூறியதை நன்கு விளக்கமாக அறிய விரும்பினான். அது எவ்வாறு எங்கு செல்லும் என்று கேட்டான். அதை ஏதுக்கள் மூலம் எடுத்துக்காட்டி அறம் உணர்த்தினான் சாதுவன். அறமுணர்ந்த நாகர் தலைவன் மேலும் சாதுவனைப் போற்றி, அவன் முன்னே வந்த வணிகர்களிடம் கவர்ந்த பொருள்களையெல்லாம் கொண்டு வந்து வைத்து, கொள்க என்று வேண்டிக் கொண்டான். பின்னர் சந்திரதத்தன் என்னும் வணிகனது கப்பல் அங்கு வர, அதில் சாதுவனை ஏற்றித் தான், உணர்ந்த அறம் தவறாது என்றும் வாழ்வதாக வாக்களித்து,