பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 55 பொன்னும் பிறவும் கொடுத்து, 'சென்றுவருக' என்று வழியனுப்பினான். சாதுவன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு இந்நகர் வந்து தன் மனைவியொடு கலந்து மகிழ்ந்து வாழ்வானாயினான். கணவனும் மனைவியும் கலந்து இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்து வரு கின்றார்கள். அத்தகைய அரும்பெருங் கற்புடைப் பெண்ணாகிய ஆதிரை, தன் கையால் அமுத சுரபியில் சோறிட வேண்டும், என்றாள் காயசண்டிகை. ஆதிரையின் சிறப்பறிந்த மணிமேகலை அச் செல்வி வாழும் மாளிகையின் தலைவாயிலில் சென்று எழுதாத ஓவியம் போன்று அசையாது நின்றனள். அவள் நிற்பதை அறிந்த ஆதிரை நல்லாள் அவளைத் தொழுது வலம்கொண்டு, நாட்டில் துயர்கெட, பசிப்பிணி அற, அமுத சுரபி நிறைதர. 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுவதாக’ என்று சொல்லி ஆருயிர் மருந்தாகிய உண வினை இட்டாள். நாடு நலம் பெற்றது.