பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

பற்றும் பழியும் காயசண்டிகை வரலாறு ஆதிரை நல்லாள் இட்ட பிச்சையினை ஏற்ற அமுதசுரபி, எடுக்க எடுக்கக் குறையாத வகையில் உணவினைப் பெருக்கிற்று. மணிமேகலையும் மகிழ்ச்சி கொண்டவளாகி, அனைவருக்கும் வாரி வாரி உண வளித்தாள். அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அற வோன், திறத்து வழிப்படும் செல்கைபோல், அவ்வமுத சுரபி அறப்பெருஞ் செல்வியாகிய மணிமேகலையின் கையகம் பொருந்தி, நன்கு பயன் தந்தது. வற்றாப் பாத்திரத்தைக் கண்ட காயசண்டிகை மகிழ்ந்து, தன் யானைத்தீ யென்னும் பசிப் பிணி நீங்குமென்று கருதி, தான் பெரும்பசி யுற்று வருந்தியதைக் கூறி உணவு கேட்டனள். மணிமேகலையும் மகிழ்வுடன் அளிக்க, இட்டசோறு அக் காயசண்டிகையின் நெடுநாளைய கொடும் பசிப்பிணியை நீக்கிற்று. பசிப்பிணி நீங்கிய காய சண்டிகை தன் வரலாற் றை மணிமேகலைக்குக் கூறுவாளானாள். வடதிசைக் கண்ணுள்ள விஞ்ஞையர் உலகில் உள்ளது வித்தியா புரம் என்ற ஊர். அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள் அவள். அவளும் அவள் கணவனும் தெற்கேயுள்ள பொதிய மலையின் எழிலை யெல்லாம் கண்டு களிக்கத் தெற்கு நோக்கி வந்தனர். அவ்வாறு புறப்பட்டு வந்த போது, வழியில் ஒரு சிற்றாற்றின் கரையிடத்து அவ ளும் அவள் கணவனும் தங்கினர். அவர்கள் தங்கிய இடத்துக்குப் பக்கத்தில் அங்கு தவம் செய்துகொண் டிருந்த விருச்சிகன் என்னும் முனிவன் தான் உண்பதற்