பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

7 ஆருயிர் மருந்து கெனப் பழுத்த நாவற்கனி ஒன்றை ஒரு தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அவள் அறியாமை யால் நடக்கும்போது தவறிக் காலால் மிதித்து அக் கனியைச் சிதைத்து விட்டாள். 57 நீராடிவந்த விருச்சிக் முனிவன் தன் உணவாகிய கனி சிதைந்திருப்பதைக் கண்டு வயாவும் வருத்தமு முற்று, கோபம்கொண்டு அவளைச் சபித்தான். அக் கனி பன்னிரண்டாண்டுக்கு ஒரு முறை பழுப்பதென் றும், தான் பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை உணவு கொண்டு யோகம் புரிபவனென்றும், அக்கனியை உண் டால் பன்னீராண்டு பசியே தெரியாதென்றும் கூறி, அப்பழம் சிதையுண்டமையின் அடுத்த பன்னிரண்டு ஆண்டும் தான் பசியோடு இருக்க வேண்டுமென்றும், அதுவரை அக்காயசண்டிகையும் யானைத்தீ யெனும் பசிநோயால் வருந்தவேண்டும் எனவும் சபித்தான். பன்னிரண்டாண்டுகள் கழித்து மறுபடியும் தான் அக் கனியினை உண்ணும்போது அவளும் அந்நோய் நீங்கப் பெறுவாள் என்று சாப நீக்கமும் செய்தருளினான். அத்துடன் அவள் விஞ்சையளாதலால் ஆகாயவழியே பறந்து செல்ல அவள் கற்றிருந்த அந்த மந்திரமும் அவளுக்குப் பயன்படாது போக ஆணையிட்டான். அது முதல் ஆனைத்தீ அவளைப் பற்றியது. அவள் கணவன் சிறந்த கனிகள் பலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தும் அவள் பசி நீங்கப் பெற்றாள் இல்லை' வான் வழிப்பறந்து செல்ல முயன்றபோது, அவள் கற்ற மந்திரமும் அவளுக்குப் பயன்படவில்லை. கண்ட கணவன்.