பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

58 ஆருயிர் மருந்து 'சம்புத் தீவினுள் தமிழக மருங்கின் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் ஆற்று மாக்கட்கு ஆற்றும் துணையாகி நோற்டூேர் உறையும்’ காவிரிப்பூம் பட்டினத்தில் அவளைச் சென்று தங்கு மாறு பணித்தான். அங்கு பன்னிரண்டு ஆண்டுகள் இருப்பின், பின் அந்நோய் நீங்கப் பெறுமென்றும் பின் னர் தன்னை வந்து அடையலாம் என்றும் அவள் கண வன் கூறி அவளை விட்டு, விண் வழிச் சென்றான். அது முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா விற்கு அவள் கணவன் வரும்போது கண்டு செல்வான். அம்முனிவன் கனி உணவுண்ணும் நாள் அந்நாள் போலும். ஆண்டுகள் பன்னிரண்டு அகன்றிருக்கும். அதனாற்றான் அவள் பசிப்பிணி அற்றவளானாள். உலக அறவியல் இவ்வாறு காயசண்டிகை தன் வரலாற்றை மணி மேகலைக்கு எடுத்துரைத்தாள். மேலும் அவ்வூரில் உள்ள சக்கரவாள கோட்டத்தில் யாரும் எப்போதும் வந்து தங்குவதற்கென, என்றும் திறந்துள்ள 'உலக அறவி' என்ற ஓர் இடம் உண்டென்றும், அதில் ஊர் தொறும் பசிப்பிணியால் உழன்று, தீர்க்கவகையற்ற மக்கள் பலர் வந்திருக்கின்றார்கள் என்றும், அங்கு மணிமேகலை சென்று அவர் தம் பசியை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். பின்னர் அக்காய சண்டிகை மணிமேகலையை வணங்கித் தன் நாட்டுக்குச் செல்வதற்கு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். உ