பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

7 ஆருயிர் மருந்து 59 விஞ்சை மகள் நீங்கிய பிறகு மணிமேகலை தெரு விடை ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று உலக அறவியை அடைந்தாள். அடைந்து அதை மும்முறை வலம்வந்து வந்தனை செய்து, அதில் கால் வைத்து ஏறி அங்கு கோயில் கொண்டுள்ள சம்பாபதி என்னும் தெய்வத் தையும், தனக்கு முன் வழிகாட்டிய அந்தக் கந்திற் பாவையையும் பலமுறை வணங்கினாள். பின்னர் கொடும் கானகத்து வெயில் வருத்தப் பசியால் பட்டு வாடும் மக்களுக்கு மழை போன்று, ஆண்டு வருந்தும் மக்கள் முன் தோன்றி, ‘ஆபுத்திரன் கை அமுதசுரபி யிது யாவரும் வருக ஏற்போர் தாம்' என அனைவரையும் அருகழைத்து, அவர்தம் பசி நீங்கு மளவும் தன் வற்றாப் பாத்திரத்திலிருந்து வாரி வாரி அனை வருக்கும் உணவளித்து வருவாளானாள். அவள் அறநிலையை ஊராரும் நாட்டு மக்களும் ஒரு சேர அறிந்து போற்றுவாராயினர். சித்திராபதியின் சீற்றம் மணிமேகலை பிக்குணிக் கோலம் கொண்டு, உலக அறவியேறி அமுதசுரபியைத் தாங்கி அனைவருக்கும் உணவளிக்கிறாள் என்ற செய்தியைச் சித்திரபதியாகிய அவளுடைய பாட்டி அறிந்தாள். அறிந்து மிகவும் வருத்த முற்றாள். அழகுத் தெய்வமாகத் திகழ வேண்டியவளாகிய மணிமேகலை இப்படிப் பாழாகி விட்டாளே என்று மணிமேகலையை நொந்து கொண் டாள். எப்படியாவது முயன்று உதய குமரனிடம் சொல்லி, மணிமேகலையைப் பரத்தமை வாழ்வுக்குப் "