பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

60 ஆருயிர் மருந்து பற்றி வருவேன்' என்று சூளுரைத்தாள். அருகே இருந்த நாடகக் கணிகையரை யெல்லாம் நோக்கினாள். பின் பேசினாள். .

  • கோவலன் இறந்தால் மாதவி இப்படியா மீாறிப்

பிக்குணிக் கோலம் கொள்ள வேண்டும். இது நம் குலத்துக்கு அடுக்கும் செயலன்றே! இது நகைப்புக்கு இடனாகிய ஒன்றாகும். நாம் கணவனொடு இறக்கும் கற்புடை மகளி ரல்லோம். பாணன் இறந்தும் அவனோடு இறவாத யாழ் போல்வோம். தேனை உண்டு வறிதாக்கிய பின் மலரை விட்டுப் பிரியும் போல்வம் தான் கெட்டதோடன்றி, வண்டு தன் மகள் மணிமேகலையையும் இவ்வாறு பாழ்படுத்திவிட்டாள் மாதவி.நான் உதய குமரன் மூலம் அவளது பிக்குணிக் கோலத்தைமாற்றி, அவனொடு தேரில் ஏறி வரும்படி செய்வேன், என்று கூறினாள் சித்திராபதி. உதய குமரன் மனமாற்றம் உதய குமரன் முதலில் மணிமேகலையை விரும் பினான் ஆயினும், பின்னர் மணிமேகலா தெய்வம் உணர்த்திய நெறியாலும், மணிமேகலை துறவொழுக்கம் தெய்வத் தன்மை ஆகியவற்றை அறிந்தமையா லும் ஒரு வாறு அவளை மறந்தே இருந்தான். அவனைக் கொண்டு தன் காரியத்தை முடிக்கச் சூள் செய்த சித்திராபதி தெருவெலாம் கடந்து அவன் இருக்குமிடத்தை நாடி வந்தடைந்தாள். அவன் தன் அரண்மனையில் அழகு பொருந்த வீற்றிருந்தான். அவரைக் கண்டு வணங்கித் தான் வந்த காரணத்தைச் சித்திராபதி எடுத்துக் கூறினள். அழகார் செல்வியாகிய மணிமேகலை அம்பலத் துள்ளாள் என்றும், உதய குமரன் விரைந்து சென்றால்