பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

7 61 ஆருயிர் மருந்து பற்றலாம் என்றும் எடுத்துரைத்தாள். ஆனால், அவன் முன்னர் பளிக்கறையில் அவளைக் கண்டு காமுற்றதை யும், பின் கையகப் படுத்த முடியாது திரும்பியதையும், பின்னர்க் கனவிடைத் தோன்றி ஓர்தெய்வம் அவள் செம்மையை எடுத்துணர்த்தியதையும், அச்சத்தோடு கூறினான். அது கேட்ட சித்திராபதி நகைத்து முன் னாட்களில் பெண்டிர் வயப்பட்ட சிறந்தவர்களைப் பற்றி யெல்லாம் கூறி, உதய குமரனைப் போன்ற காளையர் மணிமேகலை போன்ற கன்னியரை அடைதல் கடன் என்றும் வற்புறுத்தினாள். உதயகுமரன் உள்ள மும் அவன் ஊழ்வினை வசத்தால் தளர்ந்தது. அம்பலம் புகுதல் மனம் மாறிய அரசமைந்தன் சித்திராபதியைச் செல்க என்று அனுப்பித் தான் உடனே மேகலையைக் கொண்டு வருவதாகக் கூறித்தேரேறிப் புறப்பட்டான். விரைந்து மணிமேகலை தங்கியிருந்த-உணவினை வாரி அளிக்கும் - அந்த அம்பலத்தை அடைந்தான். அடைந்து, பிக்குணிக் கோலத்தோடு, பிறர்க்கு உணவளிக்கும் செல்வியைக் குறுகி,

  • உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்தென்

நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கீ யேற்று ஊன் விரும்பின காரணம் என்?' என்று கேட்க விரைந்து அவ்வாறே அவள் அருகே சென்று கேட்பானாயினான். உதய குமரனை எதிரில் கண்ட காரிகை முன்பிறப்பின் தன் கணவனாயிருந்த இராகுலன் இவனே என்று அறிந்த காரணத்தாலே