பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

62 ஆருயிர் மருந்து அருகே சென்று அவனை வீழ்ந்து வணங்கினள். வணங்கித் தான் துறவு பூண்ட காரணத்தையும் உரைப் பாளாயினள். பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் ' என்று உரைப்பாளாயினள். மணிமேகலையின் மாற்று வேடம் இவ்வாறு அவனுக்குத் தன் துறவு நிலையின் காரணத்தை எடுத்துக் காட்டிய மணிமேகலை விரைந்து அருகிலுள்ள சம்பாபதிக் கோயிலுள்ளே புகுந்தாள். அங்கு சம்பாபதியை வணங்கி, ஆடவர் திறம் அறியாக் காரணத்தால், உதயகுமரன் எதுவும் செய்யக்கூடும் என்று அஞ்சினவளாகி, தான் கற்ற மாற்றுருக் கொள் ளும் மந்திரத்தால் காயசண்டிகையின் வடிவினைப் பெற்று, பாத்திரம் ஏந்தி, மறுபடியும் வெளிவந்து அனை வருக்கும் சோறு அளிப்பாளாயினள். அது கண்ட உதய குமரன் வருந்தி மணிமேகலை சம்பாபதிக் கோயி லுள்ளேயே ஒளித்துக் கொண்டாள் என்று கருதிய வனாகி, அங்கு கோயினுள் புகுந்து அத் தெய்வத்தை வணங்கி மணிமேகலையைப் பற்றிக் கேட்பானாயினன். தன் பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மணிமேகலை உள்ளே எங்கே ஒளித் துக் கொண்டாள் என்றான். அவளை அவ்வுள் ளிடத்து எங்கே கண்டு தேடுவது என்று வருந்தினான்.