பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

> 63 ஆருயிர் மருந்து அவளைக் காட்டித் தருமாறு தெய்வத்தை வேண்டி னான். மேலும் எத்தனை நாளாயினும் அவளைக் கண்டு கைப்பற்றி உடன் தேரேற்றிக்கொண்டு அல்லால் அவ் விடத்தை விட்டுச் செல்ல மாட்டாத ஒரு பெரும் சூளு ரையும் மேற்கொண்டான். வஞ்சினம் கூறி அத்தெய் வத்தை மும்முறை வலம் கொண்டு பணிந்தான். அப் போது அங்குள்ள ஒரு தெய்வம் அவனை நோக்கி, அவன் அறியாது சூள் உரைத்தான் என்றும், அவனால் அச்செயல் ஆற்றமுடியா தென்றும் எடுத்து விளக் கிற்று. இவற்றைக் கேட்ட உதய குமரன் எல்லாம் ஒரே வியப்பாக உள்ளதை உற்று அறிந்து, மேலும் அவள் திறம் அறிந்து கொண்டு அச்செயலை மேற் கொள்ளவேண்டும் என்று எண்ணினவனாய் அவளை விட்டு அகன்றான். அரசன் அறிந்தான் உதயகுமரன் அம்பலம் விட்டுச் சென்றான் என் பதை அறிந்த மணிமேகலை அச்சம் அகன்றவளானாள். மேலும் தன் இயற்கை வடிவோடு சென்றால் உதய குமரன் தன்னைப் பற்றப் பலவகையில் முயல்வான் என்று கருதினவளாகி அக்காயசண்டிகையின் வடிவை மாற்றாமலே அப்படியே தெருவு தோறும் சென்று ஆற்றா மக்கட்கு அமுத சுரபியிலிருந்து உணவளித்து வந்தாள். நகர தெருக்கள் பலவினும் சென்று அழிபசி யால் வாடினவர் வருத்தம் தீர்ந்த பின், அவள் ஊரில் உள்ள சிறைக் கோட்டம் சென்று சேர்ந்தாள். சிறை யிடை வாடிய மக்களுக்கெல்லாம் அவர் தம் வருத்தம் நீங்க நல்லுணவு ஈந்தாள். ஒரு பாத்திரத்திலிருந்து வற்றாமல் உணவினை எடுத்து அனைவருக்கும் அளித்த