பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

> ஆருயிர் மருந்து 65 வினவினான். மணிமேகலை தான் காய சண்டிகை வடி வோடு இருந்ததால் தன்னை ஒரு விஞ்சை மகள் என்று கூறிக் கொண்டு அரசனை வாழ்த்தி அமுத சுரபி அங்கே கோயிலுள்ள ஒரு தெய்வம் தந்தது என்று கூறி, அப் பாத்திரம் யானைத்தீயெனும் நோயைப் போக்கியதை யும் வற்றா வளமுடைய தன்மையையும் எடுத்துரைத் தாள். அவற்றைக் கேட்ட மன்னன் தான் அவள் பொருட்டு ஏதேனும் செய்ய வேண்டுமோ என்று வின வினான். தனக் கென வாழாத் தன்மையளான மணி மேகலை சிறைக் கோட்டத்தைத் திருத்தி, அனைவரை யும் விடுவித்து அக்கோட்டத்தை அறக் கோட்டமாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். அரசனும் அவள் வாய் மொழியேற்று விரைந்து சிறையைச் செப் பனீடு செய்து, அறவோர் வாழும் அரும் பள்ளியாக மாற்றினன். சிறைச்சாலை அறச்சாலையாக விளங்கிற்று. மீண்டும் உதயகுமரன் தன் தந்தையாகிய சோழ வேந்தன் அவைக் களத்தே மணிமேகலை வந்து சென்றதையும், அவள் வாய்மொழிப்படியே அரசன் சிறைக் கோட்டத்தை அறக்கோட்ட மாக்கியதையும், பிற செயல்களையும் உதயகுமரன் கேட்டறிந்தான். எப்படியும் மணிமேகலை யைப் பற்றிக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தான். மதியோர் எள்ளினும், மன்னவன் காயி னும் அதற்காகக் கவலாது, அவள் அம்பலம் நீங்கி வரும்போது, அவளைப் பற்றித் தேரேற்றிவந்து, அவள் விஞ்சையைப்பற்றி யெல்லாம் அவள் வாய்மொழியா லேயே கேட்டறிவேன்' என்று கூறித் தேர் ஏறிப் புறப்பட்டான். புறப்பட்டவன் உலக அறவியைச் சென்று சேர்ந்தான்.