பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

66 ஆருயிர் மருந்து காஞ்சனன் வருகை ஏறக்குறைய அதே வேளையில் காஞ்சனன் என்ற விஞ்சையன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் யார்? எதற்காக வந்தான்? ஆம். அவன்தான் காயசண்டி கையின் கணவன். யானைத் தீ யென்னும் நோயினைப் பெற்று அவள் வருந்திய காலத்து, காவிரிப்பூம்பட்டி னம் செல்க என்று பணித்து, ஆண்டுதோறும் நடை பெறும் இந்திர விழாவிலே வந்து கண்டு சென்ற அந்த விஞ்சையன் தான் காஞ்சனன். தன் மனைவி பன்னிரண் டாண்டு கழிந்ததும், நோய் நீங்கப் பெற்ற பின், தன் னிடம் வந்து சேர்வாள் என்று நினைத்திருந்தான் அவன். ஆண்டுகள் பன்னிரண்டாயினும் அவள் வரா திருக்கவே தானே நேரில் புறப்பட்டு அவளைக் காணக் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தான். அவ்வூரில் பூத சதுக்கமும் பூ மலர்ச்சோலையும், மாதவர் இடங் களும் மன்றமும் பொதியிலும் எங்கும் தன் மனைவி யைத் தேடினான். அவளைக் காணவில்லை. இறுதியில் காயசண்டிகை வடிவில் கையில் ஏந்திய பாத்திரத் தோடு அனைவர்தம் பசிப்பிணியையும் நீக்கி நிற்கும் மணிமேகலையைக் கண்டு அவளே காயசண்டிகை என முடிவு செய்துவிட்டான். உடனே மணிமேகலை அருகு சென்று அவளைப் பலவாறு புகழலானான். அவளது வருத்தம் அறிந்த தேவர்கள் அப்பாத்திரத்தை அவ ளுக்குக் கொடுத்தார்களோ என வியந்தான். மணி மேகலையோ அவனை அறியாளாகையால் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. தன்னை நோக்கிப் பேசாத காய சண்டிகையின் வடிவிலுள்ள மணிமேகலையை மேலும் பற்பல காதல் வார்த்தைகள் புகன்றும், பழைய வாழ் P