பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

> 07 ஆருயிர் மருந்து வை நினைவூட்டியும் தன் பக்கல் திருப்ப முயன்றான். மணிமேகலையோ அவற்றையெல்லாம் பொருட்படுத் தாது, அப்போதுதான் அங்கு வந்த உதயகுமரன் பால் விரைந்து சென்றாள். சென்றவள் அவன் காமக் குறிப் பொடு வந்திருக்கின்றான் என்பதை அறிந்து, இளமை யும் யாக்கையும் நிலையாதென்பதை நரைமூதாட்டி ஒருத்தியைக் காட்டி எடுத்துரைத்தாள். காஞ்சனன் சீற்றம் பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்துத், தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த, வஞ்சம் தெரியா மன்னவன் மகனே' என்று மணிமேகலை, காய சண்டிகையின் வடிவில் உதயகுமரனுக்கு உணர்த்திய தைக் கேட்ட காஞ்சனன் சீற்ற முற்றான். தன் மனைவி தன்னை வெறுத்து தன் முன்னமேயே இந்நாட்டு மன்ன வன் மகன் போலுள்ள மாற்றானிடம் காதல் குறிப்புத் தோன்றப் பலப்பல பேசியும் குறிப்புணர்த்தியும் நின்ற னள் என நினை த்தான். அக்கள்ளக் காதலின் காரணத் தினால்தான் அவள் அந்நாள் வரையில் அந்நகரை விட்டு நீங்கவில்லை என்றும் முடிவு செய்தான். அந்த முடிவு மேலும் அவன் எண்ணத்தைத் தூண்டிற்று. எப்படியும் அவள்மேல் காதல் கொண்ட அரசகுமரன் அங்கு அடிக்கடி வருவான் என்றும், அவர்கள் நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதி அந்த அம்பலத்தின் ஒரு பக்கத்திலேயே புற்று அடங்கு அரவின்' மறைந்து இருந்தான். உதயகுமரன் முடிவு மணிமேகலை கூறியதையெல்லாம் எண்ணிப் பார்த் தான் உதயகுமரன். அவனுக்கு ஒன்றும் விளங்க