பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

68 ஆருயிர் மருந்து வில்லை. ஒரு வேளை மணிமேகலைதான் இவ்வாறு காய சண்டிகை உருவத்தில் உருமாறி உள்ளனளோ என எண்ணினான். எனவே அன்று இரவு எப்படியும் அந்த அம்பலத்தில் வந்து அவள் உண்மை அறியவேண்டு மென்று முடிவு செய்து, அப்போதே அந்த இடத்தை விட்டு வெளியேறினன். சென்றபின் அன்றைப் பொழுதுதைக் கழித்து, இரவினை எதிர் நோக்கி இருந்தான். இரவும் வந்தது; யாவரும் உறங்கினர். நடு இருள் யாமத்து 'வேழம் வேட்டு எழும் வெம்பு போல' அரச மாளிகையை விட்டு வெளியேறினான். பின் தெருவெலாம் கடந்து மணிமேகலை யிருந்த அம்பலத்தினுள்ளே

  • வேக வெந்தீ நாகம் கிடந்த

போகுயர் புற்றளை புகுவான் போலப் ' புகுத்தான். அவன் வருகையே எதிர்நோக்கியிருந்த காஞ்சனன், அவன் தன் மனைவியை நோக்கித்தான் வருகின்றான் என நினைத்து, அவன் பின்னேயே பதுங்கிச் சென்று, இடம் பார்த்து, அவனை வெட்டி வீழ்த்தினான். அந்தோ பாவம்! காமபரவசனாக வந்த உதயகுமரன் விஞ்சையன் வாளாள் வெட்டுண்டு மடிந் தொழிந்தான். காயசண்டிகை எங்கே? உதயகுமரனை வெட்டிய வீழ்த்திய காஞ்சனன் விரைந்து சென்று காயசண்டிகை வடிவிலுள்ள மணி மேகலையைக் கைப்பற்றிக் கொண்டு விரைந்து அந்தர வழியாகத் தன்னாடு செல்லக் கருதி உள்புகுந்தான்.