பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

| ↓ 69 ஆருயிர் மருந்து ஆனால் அவன் செல்வதைத் தடுத்து அருகேயுள்ள துணிலிருந்த கந்திற் பாவை காயசண்டிகை எங்கே என்பதை எடுத்துரைத்தது. 'செல்லாதே நில்! அவள் உன் மனைவி யல்லள். காயசண்டிகை வடிவில் உள்ள அறச் செல்வி மணி மேகலை யாவாள். உன் மனைவி தன் பெரும் பசி நீங்கிய பின் இவளை வாழ்த்தி, உன்னை அடைய விரைந்து வான்வழிப் பறந்து வருவாளாயினள். அப்போது ஓர் கொடுமை நிகழ்ந்தது. வான்வழிச் செல்வோர் யாவரும், விந்தமாமலையின் மேல் பறந்து செல்ல மாட்டார்கள். அப்படிச் சென்றால் அல்லல் நேரும். அதை அறியாத உன் மனைவி விந்தமலைமேல் விரைந்து பறந்து உன்னை அடைய வந்து கொண்டிருந்தாள். அப்போது அம்மலையைக் காவல் புரியும் விந்தாகடிகை என்னும் தெய்வம் தன் சாயையினால் அவளை அருகில் பற்றித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. அது பற்றி வருந்தற்க! இன்னும் கேள். உதயகுமரன் தன் ஊழ்வினையின் காரணத்தாலே வெட்டப் பட்டானா யினும், அவனைக் கொலை செய்த பாவம் உன்னைப் பற்றாது விடாது. எல்லாம் வினைப்பயன்' என்றது பாவை. பாவை சொல்லிய அனைத்தையும் கேட்ட காஞ்சனன் மிகவும் வருந்தி, வான்வழிச் சென்று விட்டான். மணிமேகலையின் வருத்தம் உதய குமரன் இருளூடு வந்ததையும், காஞ்சனன் ஒளித்திருந்ததையும் மணிமேகலை அறியாள். உறங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எனினும் காஞ்சனன் வாள் வீச்சும், உதய குமரன் சாவுக்குரலும் அவளை