பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து உ எழுப்பியிருக்க வேண்டும், அத்துடன் தூணிற்பாவை சொன்ன வரலாற்றையும் கேட்டு உதயகுமரன் இறந் ததை நன்கு அறிந்து கொண்டாள். உடன் தன் முந்தைப் பிறவியின் கணவனான இரரகுலன் இறந்தான் என வருந்தினாள். காயசண்டிகை உருவல்லவா அவன் உயிருக்கு உலைவைத்து என்று கருதிக் 'கெடுக இவ்வுரு’ என்று அதை விடுத்துத் தன் இயற்கை உருவினை யெய்தினாள். பின்னர் உதய குமரன். வெட்டுண்டு வீழ்ந்து கிடந்த இடத்தை நோக்கிச் சென்றாள். அவன் துணிபட்டுக் கிடப்பதைக் கண்டு கவன்று, சென்ற பிறவியில் அவன் திட்டிவிடத்தான் இறக்க. அவனுடன் சேர எரிப்புகுந்ததையும், பின் இப்பிறவியில் மலர்ச் சோலையில் அவனைக் கண்டதும் கருந்தழிந்ததையும். பின் மணி பல்லவத்தே இவர்தம் பழம் பிறப்புணர்ந்த தையும் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணி எண்ணி எடுத் துரைத்தாள். பின்னர் அவனை நல்வழியில் திருப்பவே அவனுக்கு அறம் கூறித் தான் காயசண்டிகையின் வடிவு பெற்றதையும் சொன்னாள். 70

  • பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்

அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான் நினக்கு உரைத்து நின் இடரினை ஒழிக்கக் காய சண்டிகை வடிவானேன் காதலா' என்று கவன்றான். அறியாது விஞ்சையன் இழைத்த கொடுமையைக் கூறினாள். கூறிக்கொண்டே உதய குமரன் அருகில் சென்றுவிட்டாள் மணிமேகலை. அதைக் கண்ட அங்கு கோயில் கொண்ட தெய்வம் ஒன்று,