பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

1 ஆருயிர் மருந்து 93 கப்பல் வல்லாரைக் கூவி நல்லதொரு நாவாய் அமைத் துக்கொண்டு மணிபல்லவம் நோக்கிப் புறப்பட்டான். ஆபுத்திரன் வருகைக்காகக் காத்திருந்த மணி மேகலை அவன் வந்ததும் 'வருக' என்று அழைத்துச் சென்று, அத்தீவினை வலம் செய்து அனைத்தையும் காட்டினான். பின்னர் 'பிறப்புணர்விக்கும் புத்த பீடிகை இது' என்று அத் தரும பீடிகையையும் காட்டினள். அவனும் அப்புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி நின்றான். அவன் பழம் பிறப்புணர்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாயின. எல்லாவற்றிற்கும் மேலாக. அவன் தென் மதுரையில் இருந்த காலத்து அந்த அமுதசுரபியை அளித்த சிந்தாதேவியின் தோற்றம் தெரிந்தது. அவளை வாய் விட்டுப் போற்றினான். ‘அமுத சுரபி அங்கையில் தந்து என் பவமறு வித்த வானோர் பாவாய் உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும் அணிதிகழ் அவிர் ஒளி மடந்தை நின்னடி தேவ ராயினும் பிரம ராயினும் நாமாசு கழுஉம் நலம்கிளர் திருந்தடி பிறந்த பிறவிகள் பேனுவ தல்லது மறந்து வாழேன்' என்று எப்பிறவியினும் அவளடி மறவாது போற்றுவ தாக உறுதி செய்தான். பின்னர் அவன் மணிமேகலை யுடன் அப்புத்த பீடிகையை வணங்கித் தென்மேற் காகச் சென்று அங்குள்ள கோமுகிப் பொய்கைக் கரை யில் ஒரு புன்னை மர நிழலில் தங்கி யிருந்தான். 7