பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

92 ஆருயிர் மருந்து ஆழ்ந்த துன்ப முற்றான். அத்துன்பத்தின் காரணமாக அரச போகங்களை வெறுத்தான். மகளிர் தம் ஆடலும் பாடலும் அழகும் பிறவும் அவனை மயக்கா தொழிந் தன. துறவு கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவன் உள்ளத்தைத் துளைத்தது. அவ்வுள்ளத்தைத் திறந்து காட்டவும் செய்தான். அரசனின் துறவெண்ணத்தை அறிந்த சனமித் திரன் என்னும் அமைச்சன் அவனை அடைந்து அவன் எண்ணத்தை மாற்ற முயன்றான். அவன் பிறக்குமுன் நாட்டில் நிலவிய கொடிய பஞ்சத்தையும் பட்டினியை யும் விளக்கிச் சொல்லி, பின் அவன் பிறந்து நாடு நலம் பெற்று வளமுற்று ஓங்குவதையும் எடுத்துக்காட்டி, இந்நிலையில் அவன் பிரிவானாயின் நாட்டு மக்கள் பெரும் துயருற்று வாடுவார்களென்றும், இத்துணை மக்களை வாட விட்டுச் சுயநலம் நாடும் துறவற நெறியை மேற்கொள்ளுதல் தக்கதன்றென்றும் எடுத் துரைத்தான். ' தன்னுயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் மன்னுயிர் முதல்வன் அறமும் ஈதன்று' என்று எடுத்துக் காட்டினான். அமைச்சன் கூறிய நல்லுரையை ஏற்ற மன்னன் சிறிது துயர் நீங்கித் துறவெண்ணத்தையும் விடுவானா யினன். எனினும் மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பையும் பிறவற்றையும் உணரவேண்டும் என்ற அவா தணிந்திலது. எனவே அவன் அமைச்சனை நோக்கி, தான் ஒரு திங்களுக்குள் மணிபல்லவம் சென்று வருவதாகவும், அது வரை ‘அரசும் உரிமையும் மாநகர் சுற்றமும் அமைச்சன்பால் காவல் வைக்க பெறுமென வும் கூறினன். அமைச்சனும் அதற்கு இயைய உடனே