பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


அலாஸ்காவில் பொன், நிலக்கரி, எண்ணெய், பிளாட்டினம் ஆகியவை கிடைக்கின்றன. கனடா வின் வட பகுதியில் நிலக்கரி, பொன், யுரேனியம் கிடைக்கின்றன. சைபீரியாவில் தாதுக்கள் அல்லது கனிப் பொருள்கள் நிறைய உள்ளன.

கிரீன்லாந்திலிருந்து அலுமினியம் செய் வதற்கு வேண்டிய எல்லாக் கிரியோலைட்டும் கிடைக்கிறது. ஸ்பிட்சன்பர்க்கிலிருந்து பெருமள வுக்கு நிலக்கரி கிடைக்கிறது. தொலை வடக்குப் பகுதியில் பொன், செம்பு, இரும்பு, எண்ணெய், ரேடியம், யுரேனியம் ஆகியவை கிடைக்கின்றன.

ஆர்க்டிக்கின் பெரும் பகுதி ஆராயப்படாத பகுதியாகும்; வளராத பகுதியாகும். இருப்பினும், அது ஒரு பெரிய கனிப் பொருள் களஞ்சியமாக விளங்குகிறது.

உயிர்கள்

நிலப்பகுதியில் அரிய மரங்கள் மிகுதியாக உள்ளன. மரங்கள் இல்லாத பகுதியில் கால்நடைகளுக்கு வேண்டிய தானியங்கள் விளையும். புல், பூண்டு முதலியவையும் உண்டு. சோவியத்து நாட்டுக்குச் சொந்தமான பகுதிகளில் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. மற்றும் லைக்கன்கள், பாசிகள் முதலியனவும் காணப்படுகின்றன.

சைபீரியாவின் லீனா ஆற்றுப் பள்ளத்தாக்கு மிகக் குளிர்ந்த இடமாகும். இங்கு மாரிக் காலங் கள் மிகக் குளிராக இருக்கும். இங்கு வெப்பநிலை