பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


மக்கள்

ஆர்க்டிக் பகுதியில் முக்கியமாக எஸ்கிமோக்கள் வாழ்கின்றனர். 1915 ஆம் ஆண்டிற்குப் பின் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் உருசியா முதலிடத்தைப் பெற்றது. அதன் வட பகுதியை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

மர்மான்ஸ்க் ஒரு பெரிய நகரமும் துறை முகமும் ஆகும். இது ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ளது. இரண்டாம் உலகப் போரில் இது அதிகமாகப் பயன்பட்டது. இதன் மக்கள் தொகை ஒரு இலட்சம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆர்க்டிக் கண்டத்திலுள்ள தென் பகுதியின் பொருள் வளத்தைப் பெருக்க நார்வே அதிகம் செலவிட்டுள்ளது.

துருவப் பகுதியின் வழியாக நடக்கும் விமானத்தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு முதல் அரணாக இருப்பது ஆர்க்டிக் பகுதி ஆகும். இதை உணர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் தங்கள் ஆர்க்டிக்கின் வட பகுதிகளில் அதிகமாகக் கவனம் செலுத்தியுள்ளன.

ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே, கண்டத்தின் உச்சியில் ரேடார் நிலையம் ஒன்றை இரு நாடுகளும் சேர்ந்து கட்டியுள்ளன. புதிய விமானத்-