பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


தளங்களும் வானிலை, வானொலி நிலையங்களும் இங்குக் கட்டப்பட்டுள்ளன. இரு நாடுகளிலிருந்தும் வரும் விஞ்ஞானிகள் இந்நிலையங்களில் ஆராய்ச்சி செய்கின்றனர்.

வழிகள்

யுரேஷியாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுக்கு வழிகள் ஆர்க்டிக் கண்டத்தின் வழியாக அமைகின்றன. உலகப் படத்தைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு நன்கு விளங்கும். எதிர் காலத்தில் வாணிப விமான வழிகள் இக் கண்டத்தின் வழியாக நடைபெறலாம் என்று நாம் நம்பலாம்.

நாடுகள்

ஆர்க்டிக் நிலப் பகுதியில் அதிக அளவுக்கு உரிமை உடையவை சோவியத்து நாடும் கனடாவும் ஆகும். அமெரிக்கா, டென்மார்க்கு, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் ஆர்க்டிக்கில் நிலப் பகுதிகள் உள்ளன.

முக்கிய மையங்கள்

ஆர்க்டிக் வட்டத்தில் சில முக்கிய மையங்கள் உள்ளன. அவை பின் வருமாறு;

மர்மான்ஸ்க்: பசிபிக் கடலுக்குச் செல்லும். வடகடல் வழியின் முடியுமிடமாக இது உள்ளது ஆர்க்டிக் நகரங்களிலேயே பெரியது.