18
ஆர்க்டிக் ஆராய்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. புது வழிகள் கண்டுபிடிக்க வேண்டுமென் பது தொடக்க கால ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாகும். பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வட முனையை அடைய வேண்டும், ஆராய வேண்டும் என்னும் நோக்கமுடையவர்கள்.
புரோபிஷர்
இவர் தம்முடைய முதல் பயணத்தின் பொழுது, முதன் முதலாக எஸ்கிமோக்களைக் கண்டார். 1577- இல் இவர் இரண்டாம் பயணத்தை மேற்கொண்ட பொழுது, ஆசியாவிற்கு வட மேற்கு வழியைக் கண்டுபிடிக்கும் சிக்கலை ஒருவாறு தீர்த்தார். நிலப் பகுதியின் உள்ளே சென்றார்; அங்கு லைக்கன் பூண்டுகளையும் பாசிகளையும் கண்டார்.
ஜான் டேவிஸ்
இவர் 1585-87-ஆம் ஆண்டுகளுக்கிடையே மூன்று பயணங்களை மேற்கொண்டார். கிழக்கு நாடுகளுக்கு வட மேற்கு வழியைக் காணும் முயற்சியை ஊக்குவித்தார். இவரது பயணங்களால் எஸ்கிமோக்களைப்பற்றி மேலும் நன்கறிய முடிந்தது. வட முனைக்கு நேராகச் செல்லும் வழியில் இவர் செல்ல முடிந்தது. ஆனால், பசிபிக் கடல் நோக்கிச் சென்றதால், அவ்வழியாக இவர் தொடர்ந்து செல்லவில்லை.