பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் ፤ 23 'ஹல்லோ, அராகெல் மாமா! அம்மா எங்கே இருக்கிருள், தெரியுமா? நான் இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்.' இயல்பாக அவன் கைக் கடியாரத்தைக் கவனித்தான். 'நான் இங்கே வந்து ஒன்றேகால் மணி நேரம் ஆகிறது. அவளைக் காணவில்லை.” 'நான் சொல்கிறேன், அருமை வாகன், அவர் ஈழையிழுக்கும் குரலில் பேசினர். அவர் அதிகம் புகை பிடித்தார். அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. அவள் செட்ராக்கின் வீட்டில் இருக்கலாம். அவன் பேத்தி கல்யாணம் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. நல்ல பையனுகப் பார்த்துத்தான் கொடுக்கிருன். அல்லது, அகாலக்காலக்கிலிருந்து வந்திருக்கும் சிற்ப வேலைக் காரன் வீட்டுக்கு அவள் போயிருக்கலாம்; அல்லது, வால்நட் வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்குப் போயிருக்கலாம். இப்போது ஜாம் செய்யவேண்டிய காலம். வீட்டுக்கு வந்து தனக்கு உதவும்படி அவள் நேற்று மரியத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மரியம் என் மருமகள். அவள் ஆஸ்பத் திரியில் நர்ஸ் வேலை பார்க்கிருள். மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் படித்துத் தேற அவளால் இயலவில்லை. அவளுக்கு நான்கு குழந்தைகள். அவள்தான் என்ன செய்வாள்...? அல்லது, அவள் மருமகள் வாஸ்ானுஷ் வீட்டுக்குப் போயிருக்கலாம். பாவம், அந்தப் பெண் ஒரு மாதமாக உடம்பு சுகமில்லாமல் இருக்கிருள், புற்றுநோயாக இருக்கும் என்று சந்தேகிக்கிரு.ர்கள். அல்லது, அவள் செயின்ட் லார்கீஸ் சர்ச்சுக்குப் போயிருக்கலாம் . இன்று தான் நாள். அல்லது.”

  • அங்கே ஃபோன் இல்லையோ?”

செயின்ட் லார்விேலா?’ ’ 'இல்லை, என் அத்தை வீட்டில்.’’ ரிசீவரை வைத்துவிடு. நான் பார்த்துவிட்டு, உன்னைக் கூப்பிடுகிறேன்.” சன்னலிலிருந்து தோட்டங்களைத்தான் பார்க்க முடிந்தது. இலையுதிர்காலம் வந்து நாளாகியிருந்தது. பசுமை எல்லாம் மஞ்சளாக மாறியிருந்தது. சேகரம் செய்யப்பெற்ற திராட் சைகள் ஒயின் ஆகவும், சாராயமாகவும், மற்றும் பலவிதமான பொருள்களாகவும் மாறின. திடீரென்று அவனுள் ஒரு கிளர்ச்சி எழுந்தது. அம்மாவின் திராட்சைத் தோட்டத்தில் இப்பவும் ஏதாவது திராட்சைப் பழங்கள், ஒரே ஒரு கொத்தாவது, விடுபட்டிருக்குமா? கடைசி திராட்சைகள் மிகவும் ருசிகரமாக