பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் ,葱等9 பிட்டுக்கொண்டார்கள். இந்தப் பெண்ணுடன் வாழ்வது தனக்கு சரிப்பட்டு வராது என்று அவன் தெளிவாக உணர்ந்தான். கடந்துபோன இந்த மாரிக்காலத்தில், அவள் அவனை பயங்கர மாக வெறிகொள்ளச் செய்தாள். அவன் அவளை அடித்தான். 'உன் சொந்தக்காரர்களிடமே திரும்பிப் போ!' என்ருன். ஆஷ்கென் தன் போர்வையை எடுத்து மேலே போட்டுக்கொண்டு, பாவாடையைச் சுழற்றியவாறே போய்விட்டாள். அதே நாள் மாலையில் அவள் திரும்பி வந்தாள். அவர்களுடைய மருமகனும், மூத்த மகளும், பேரக்குழந்தைகளை எடுத்துக்கொண்டு அவளுடன் வந்தார்கள். தா.ஆஆத்-தாஆ!’’ என்று குழந்தைகள் கத்தின. உறுதிவாய்ந்த, வலிமை நிறைந்த ஆஷ்களுெடு தேன் நிலவு கொண்டாடியபோது கிட்டிய ஆனந்தத்தால் தன் முதுகந் தண்டில் மின்சாரம் பாய்ந்து தலை உச்சிக்கு ஏறியதை அவன் இப்பவும் உணர முடிந்தது, மற்ற வேளைகளில் எல்லாம் முற்றுப் பெருத அரைகுறை சந்தோஷம் அடைந்ததையும், வாழ்க்கை நெடியது, உலகத்தில் வேறு பெண்கள் உண்டு என்று உறுதியும் நம்பிக்கையும் கொண்டதையும் அவன் நினைக்க முடிந்தது. 'தா.ஆ ஆத்-தாஆ1’ என்ன நரகக் கூச்சல்! அவன் 400 ஆவது ரெஜிமெண்டில் பணியாற்றியபோது ஒரு நாள் அவர்களுடைய படைப்பிரிவை ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைத்துப் போனர்கள். கோரஸ் பாடியது : "அழகான அன்னம் போல, அழகான அன்னம் போல, நீ தோன்றுகிருய் எனக்கு; அழகான அன்னம் போல.’’ வெயிலால் கறுத்த கன்னங்களுடைய பெண்கள் அவர் களுக்குச் சில ஆசனங்கள் தள்ளி உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஆராரட் பள்ளத்தாக்கின் சுற்றுப்புறக் கிராமங் களிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். சிவப்புக் குட்டைகள் அணிந்த தலைகளைத் துரக்கி, அவர்கள் போர் வீரர்கள் பக்கம் கள்ளப் பார்வை பார்த்தார்கள். மார்ட்டின் ஸாக்கியனும் அங்கே இருந்தான். அவன் ஐஜீவன் வட்டாரத்திலிருந்து வந்தவன். அகலமான முகம் அவனுக்கு பரிதாபத்துக்குரிய நபரான அவன் கெர்ச் அருகில் சண்டையின்போது கொல்லப்பட்டான். அப்பாவி மார்டின் சார்ஜன்ட் பதவி வகித்தான். ஐயோ பாவம், மார்டின் ஸ்ாக்கியன். 'நாம் இந்தப் பெண்களைக் கூட்டிப்போவோம், ஆண்ட்ரோ. முகத்தில் தேமல் உள்ள பெண்ணே நான் எடுத்துக் கொள்வேன். இன்ைெருத்தியை நீ கூட்டிப் போ” என்று அவன் சொன்னன். ஆண்ட்ரோ அந்த இன்ைெருத்தியைப்