பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置9纷 ஒவ்வொரு பத்திலும் ஒருவர் அவர்கள் ஒருவரை ஒருவர் கேள்விக் குறிப்புடன் பார்ப்பார் கள். அவன் சொன்னதும் சரியாக இருக்கலாம். ஆனல், அவன் யார், எங்கே இருந்தான்? அவர்கள் எங்கும் தேடு வார்கள். ஆயினும் அவனைக் காணமாட்டார்கள். அவர்களிலேயே யாரேனும் ஒருவர் அதைச் சொல்லியிருக்கக்கூடும். ஏனென்ருல் எல்லோரும் தங்கள் கதைகளைக் கூற விரும்பினர்கள். என்ருலும் அவர்களில் ஒருவன்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆளுல் மற்றப் போர்வீரன் தொடர்ந்து பேசுவான். 'ஆடை அலமாரியை அறையின் மூலையில் நான் வைத்த போது (அறை பெரியது; வெளிச்சம் நிறைந்து சுத்தமாக இருந்தது), அதை வாசல் அருகில் வைத்தால் நன்முக இருக்கும் என்று என் மனைவி சொன்னுள்...' 'ஆனல் வாசல் அருகில் வசதிக் குறைவாக இராதா?’’ என்று ஒருவன் ஆவலோடு கேட்பான். போர்வீரர்களின் இந்தக் குழு யுத்த முன்னணிக்குப் போய் சண்டையிட மறுத்து, சில நாட்கள் ஆகியிருந்தன. இப்போது அவர்கள் எதுவோ நிகழ்வதற்காக பயத்துடன் காத்திருந் தார்கள். - "அவர்கள் வருகிருர்கள்!’’ எவனே ஒருவன் பயந்துபோய் எதிர்பாராத விதத்தில் கத்தினன். அவன் அவர்களில் ஒருவன் தான். ஆனால், விசித்திரமாக, அச் சத்தம் மிகவும், ரொம்ப அதிகம், பழக்கமானதாகத் தோன்றியது... தண்டனை விதிக்கும் படைப்பகுதி வந்தது. 'நேரே நில்லுங்கள்! சேர்ந்து வரிசையாக நில்லுங்கள்...!’’ கட்டளை பிறந்தது. அவர்கள் எப்படியோ அணிவகுத்து நின்ருர்கள். எவரும் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அனைவர் கவனமும் தூரத்தில் ஒரு வயலில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு நாய்களினல் மட்டுமே ஈர்க்கப்பட்டது. இருப்பினும், அவை சண்டையிட்டனவா அல்லது சும்மா விளையாடிக்கொண் டிருந்தனவா என்று நிர்ணயிப்பது சிரமமாக இருந்தது. அதிகாரிகளில் ஒருவர் பேசத் தொடங்கினர். அவருடைய நீண்ட பேச்சில் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வீரர்கள் நினைவு கூர்ந்தார்கள். அவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர்; இராணுவக் கட்டளைக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக ஒவ்வொரு பத்துப்பேரிலும் ஒருவர் சுடப்படுவர்.