பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய மக்களுக்கும் ஆர்மேனிய மக்களுக்குமிடையே உள்ள நட்பு, பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. சமீபத்திய ஆர்மேனிய உரைநடை இலக்கியமானது, மனிதம் முழுவதையும் தழுவுகிற வளமான சித்திரமாக விளங்குகிறது. இந்திய வாசகர்களுக்கான இக் கதைத் தொகுப்பு, மேற்கூறப்பட்ட சித்திரத்தின் ஆதாரசக்திகள், போக்குகள், சார்புகள் பற்றிய ஒரு நல்ல அறிமுகமாக விளங்குகிறது. இந்த முதல் தொடர்பு, இனி ஏற்படக் கூடிய நெருக்கமான உறவுகளுக்கும், பரஸ்பர அறிந்து கொள்ளுதல்களுக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும்.