பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெரோ கான்ஸ்ாடியன் 鑫岛 வாரிலிருந்து கத்தியை எடுத்தான். ஆட்டுக்குட்டி அருகில் போனன். கடைசி நேரத்தில் மனம் மாறினன். அர்ஷாக் வருகிறவரை காத்திருப்பேன்’ என்று அவன் தீர்மானித்தான். சேர்மனின் இரட்டைமாடி வீடு இருந்த திசையைப் பார்த்தான். 'அவன் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிருன்? சீக்கிரம் இருட்டி விடுமே. அத்திப் பழங்கள் கெட்டுப்போகும். கார்னல் பழம் ருசி இழந்துவிடும்.’’ அவன் பழங்களைக் கூடையிலிருந்து வெளியே எடுத்து சன்னல் விளிம்பில் வைத்தான். பிறகு, அண்டை வீட்டாரிடமிருந்து ஒரு புதிய மேஜை விரிப்பு இரவல் வாங்கி, மேஜைமீது பரப்பினன். கம்பளியை உதறி, சாய்வு ஆசனத்தை மூடினன். அதன்மேல் ஒரு தலையணையை வைத்தான். இப்போது எல்லாம் தயார். இன்னும் அர்ஷாக் வரவில்லை. "என்ன விஷயம்? அவன் ஏன் சேர்மன் வீட்டுக்குப் போனன்?’’ நவசார்த் எரிச்சலோடு வியப்புற்முன். அவன் கைகளில் ஒரு நடுக்கம் பாய்ந்தது. ஆயினும், இவ்வாறு சொல்லி, தன்னைத் தானே அவசரமாகத் தேற்றிக்கொண்டான் : 'அர்ஷாக் முக்கியமான மனிதன். அங்கே எட்டிப்பார்த்து, கிராமத்தில் நிலவரங்கள் எப்படி இருக்கின்றன என்று சேர்மனிடம் கேட்டாக வேண்டுமே. எனக்கு ஏன் இந்த ஆத்திரம்? அவன் இரண்டு நாட்கள் என்னுடனேயே இருக்கப் போகிருன். அவனை நான் என் பார்வையிலிருந்து தப்பவிட மாட்டேன். இழந்த காலத்தை நாங்கள் சரிக்கட்டி விடுவோம்.' சூரியன் அஸ்தமித்தது. ஆனலும் அர்ஷாக் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. கிழவனின் ஆவல் அதிகரித்தது. ஒருகணம் அவன் சேர்மன் வீட்டுக்குப் போகக் கிளம்பினன். ஆனல், உடனே தன் நினைப்பை மாற்றிக்கொண்டான். அவன் வெளிமுற்றத்துக்குப் போய், பக்கத்து வீட்டுக்காரியின் பேரனைக் கூப்பிட்டான். 'அங்கே ஒடி அர்ஷாக் என்ன செய்துகொண்டிருக்கிருன் என்று பார். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்; அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று அவனிடம் சொல்லு' என்ருன். சிறுவன் வெகு விரைவில் திரும்பினன். என்ன, நீ அர்ஷாக்கைப் பார்த்தாயா?” "ஆமாம்.” அவன் என்ன செய்கிருன்?’’