உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 113 அறுசுவை உணவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்- நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுசுவை உணவு என்றால் ருசி நிறைந்த அருமையான சாப்பாடு என்றும் ஆறுவகை, ருசி நிறைந்த சாப்பாடு என்றுதான் அர்த்தம் சொல்லக் கேட்டுமிருக்கிறோம். அரியலூரிலே எங்களுக்குத் தந்த அறுசுவை வுக்கு ஒரு புது அர்த்தமுண்டு. 1 அறுசுவை சுவை அறுந்த உணவு - சாப்பாடு எனப்படும் கொடுமை உண சுவை அறுந்துபோன கொடுமையை மண் சட்டி களில் கொட்டினார்கள். மஞ்சள் வர்ணச் சோறு! பஞ்ச வர்ணக் குழம்பு ! உப்பிலும் - புளியிலும் காரத்திலும் சேராமல் சுயேச்சையாக வந்து விழுந்த பரங்கிக்காய்த் துண்டை எடுத்து வாயிலே வைத்தோம்! எப்படியோ எதிர் நீச்சல் போட்டு அது வயிற்றுக்குள் போய்விட்டது. எல்லா தோழர்களும் சோற்றைத் தொடாமலே என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். உம் சாப்பிடுங்கள் ” என்று கூறிவிட்டு நான் சோற்றைக் கிள்ளி வாயில் போட் டுக்கொண்டேன். அண்ட சராசரங்களும் சுழலு தண்ணே” என்று குடிகாரன் பாடுவான்! "அடிவயிற்றிலே யிருந்து குமட்டு தண்ணே!" என்று நாங் க ள் பாட வில்லை. அகத்தின் அழகை முகத்தால் காட்டாமலும் இருக்கமுடியவில்லை. 66 66 சோற்று உருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டு - சட்டி களைக் கழுவிவைத்துவிட்டு - முப்பத்தாறு பேரும் அணி வகுத்தோம்; நாலு நாலு பேராக!