உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 கருணாநிதி பிறகு பழையபடி கூண்டுகளில் அடைக்கப்பட்டோம். எங்கள் "கல்கத்தா இருட்டறை ” யில் எட்டுபேர்! இரவு வந்தது - இரண்டு நாள் சரியான உணவு இல்லாத எங் களுக்கு தூக்கமாவது வந்ததா - அதுவுமில்லை! வந்தால் தான் படுப்பதற்கு இடமேது! பூச்சிகள் - வந்தன- கொசுக்கள் வந்தன - வராதவைகளில் முக்கியமான ஒன்று காற்று! எட்டுபேர் - வியர்வையோ கொட்டுகிறது-சட்- டையைக் கழற்றினால் கொசுவோ தொளைக்கிறது! மூலை யில் உட்கார்ந்து தூங்கினர் மூவர் - வேணு -ரத்தினம்- எத்திராஜ்! ஆபாசமாயிருந்த பகுதியில் காலைமட்டும் நீட் டிக்கொண்டு உடலைப் புழுப்போல சுருட்டிக்கொண்டார் சத்தி - அவர் கால்புறத்திலே தலையை வைத்து வளைந்து கிடந்தார் கஸ்தூரி கலங்கிய கண்களுடனே ராமசுப் பையா என்னைப்பார்த்து தன் மடியில் சாய்ந்துகொள்ளுங் கள் என்றார். முயற்சித்தேன் - முடியவில்லை - பிறகு ஒரு வழி கண்டுபிடித்தேன். காற்றும் லேசாக வரும்; உடம்பை யும் சுருட்டாமல் இருக்கலாம் ; என்ற எண்ணமுட சிறைக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்கினேன். இரவு 2 மணி இருக்கலாம்- சரியாகத்தான் நேரம் தெரியமுடியாதே-டிப்டி சூப்ப ரெண்ட் வந்தார்."ஏன் நிற்கிறீர்கள் தூங்க வில்லையா?" என்றார். "பரவாயில்லை எ ன்றேன். போய்விட்டார். 22 ன் எப்படியோ வாழ்க்கையிலே அதுவரையில் தொட் டறியாத கஷ்டத்தை அந்த இரவு வேளையில் அரியலூர் சிறையில் அனுபவித்தோம். படாதபாடுபட்டு இரவை நகர்த்தினோம். காலையிலே அரிசிக் கஞ்சி கொடுத்தார்கள். குடலைக் காயவிடாமல் பார்த்துக் கொண்டோம். மறுபடியும்