உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 க ரு ணாநிதி மலைக்கோட்டையின் உச்சியிலே இரவு ஒரு மணிக்கு திருச்சி வந்துசேர்ந்தோம். மழை நின்றபாடில்லை. திருச்சியின் தெருவெல்லாம் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நகர் முழுதும் பூரண அமைதி நிலவிக்கொண்டிருந்தது. நடுநிசியிலே - நகர் அடங்கிய நேரத்திலே -நாங்கள் கை திகளாகக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் காட்சியை சித்தரிக்க இயலாது தான். நனைந்துபோன ஆடை - நடுங்கும் உடல் - ஆனால் தெளிந்த உள்ளம் - இவைகளோடு எங்கள் பய ணத்தின் கடைசிப் பகுதியை முடித்தோம். திராவிட நாட் டுப் போராட்டப் பயணத்திற்கு கடைசிப் பகுதியல்ல ; முதல் பகுதி! அந்த முதல் பகுதியிலே நாமும் நடைபோட்டோம்- என்ற எக்களிப்புடன் திருச்சி விதிகளைக் கடந்தோம். சென்ற வழியிலே திராவிடப்பண்ணை முத்துவின் வீடு இருந்தது. அங்கே இறங்கி விசாரிக்காமல் சென்றது கிடையாது எப்போதும்! இப்போது நிறுத்தமுடியுமா நீங்கள் கைதிகள் காரை! அதை நினைத்தோம் என்ற உணர்வு வாயை மூடியது! 66 ஈரத்தின் கனத்தையும் தூக்கிக்கொண்டு அதோ எங்கள் லட்சியக் கொடிகள் பறந்துகொண்டிருக் கின்றன. அவை காட்டிய வழியிலே நாங்களும் நடத்திக்கொண்டிருக்கிறோம். மலைக்கோட்டையின் விட்டது. பயணம் பசசை விளக்கு மறைந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். உயர்ந்த பலமான மனமதில்களையும் - கோட்டைபோன்ற