உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 123 முகப்பையுமுடைய திருச்சி மத்திய சிறையின் வாயிலிலே போலீஸ் வண்டி நின்றது. நாங்கள் இறங்கினோம். அகாலமாகிவிட்டதால் · மறுநாள் காலையில் தான் எங்களை விழுங்க முடியும் என்று கூறிவிட்டது அதிகாரம். 66 சிறை கற்ற சரி - இதோ இந்த இடத்தில் படுங்கள் " என்று சிறைக்கு வெளியேயுள்ள ஒரு மண்டபத்தைக் காட்டினர். அதில் யோகாசனங்களும் - மாயவித்தைகளும் வர்கள் தான் படுக்கலாம். மழைத் தண்ணீர் கணுக்கால் அளவு தேங்கியிருந்தது. நீர்மேல் படுக்கும் பயிற்சி எங்களுக்கு கிடையாது. ஆகையால் தயங்கி நின்றோம். கால்வலி எடுக்கும் வரையில் நின்றோம். பிறகு கருணை பிறந்தது- " சரி இங்கே படுங்கள் ” 'இண்டர்வியூ' பார்க்குமிடத்திற்கு வெளியே அங்குபோய் எனறு உள்ள தாழ்வாரத்தைக் காட்டினார்கள். உட்கார்ந்தோம். மழைச்சாரல் நிற்கவில்லை. குளிரும் கோடி கோடித் தேளென் மாறிக் கொட்டி யது. கண்ணைத் திறக்கமுடியாத மின்னல்! 'புளூரசி' நோயினால் பீடிக்கப்பட்டவன் நான் - அதற்குக் குளிர் ஆச காது - தொலைந்துபோன நோய் - மீண்டும் தொடர்ந்து விடுமோ இந்தக் குளிரால் எனப் பயந்தேன்; அவ்வளவு குளிர் - சத்தி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்- அந்தக் கதகதப்பிலே கொஞ்சம் கண்ணயர்ந்தேன். கைகளைத் தேய்த்துக்கொண்டு சூடு உண்டாக்கியபடியும்- முழங்காலுக்கிடையே ககளைப் பொத்திக்கொண்டு சுருண்ட நிலையிலும் - எல்லாே தோழர்களும் அந்த பயங்கர இரவை மிகக் கஷ்டப்பட்டு துரத்திக் கொண்டிருந்தனர்.