உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 கருணாநிதி கூடிய அளவுக்கு தண்ணீரை சேதப்படுத்திவிடாமலும், குளிக்கவைத்திடும் பொறுப்பை ஜலஸ்தாபன மந்திரி தானே நேரில் நின்று கவனிப்பார். ஒவ்வொருவரும் எத் தனை குவளைகள் ஊற்றிக்கொண்டார்கள் என்ற கணக்குப் பார்த்து - அளவுக்கு மேலாகிவிடாத நிலையில் - அங்குமிங் கும் ஆடியோடி, கட்டுப்படுத்தி - தண்ணீர் தட்டுப்பாடில் லாமல் பார்த்துக்கொள்வார். 66 நீர்மேல் நடக்கலாம்" என்று பாட்டு படித்திருக் கிறோம். அப்படி நடந்து காண்பித்தவர் தோழர் வேலு. ஆமாம் - ஜலஸ்தாபன மந்திரி! தண்ணீர்த் தொட்டி யின் மேலேயே காலைமுதல் பிற்பகல் 3 மணி வரையிலே நடை பழகுவார். அவர் போட்டிருந்த பனியனுக்கு உட் பட்ட பாகமெல்லாம் சிகப்பாகவும் - மற்ற இடமெல்லாம் கருப்பாகவும் மாறி-ஆளே இருகலர் மனிதனாகத் தோன்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்; அவர்பட்ட கஷ்டத்தை! " கஞ்சிக்கும் - குளியலுக்கு மிடையிலே - பிளாக் வாசல் களில் ஒரு ஒலி கிளம்பும்."ஆஸ்பத்ரி! ஆஸ்பத்ரி! ' என்ற ஒலி! அதுபோன்ற சப்தம் நமது ஊர்த் தெருக் களிலே கிளம்பினால் சரிதான் சான்ஸ் எதுவு கிடைக்காமல், யாரோ ஒரு டாக்டர் ஆஸ்பத்திரியை விலை கூறுகின்றாராக்கும் என்று நினைப்போம். சிறை 66 ம் ராஜ்யத்திலே வரும் இந்த ஒலிவேறு- சுகாதார மந்திரி புகாரி சாகிப் - தன்னுடைய தேன்கூடு வடிவமுள்ள தாடி யைத் தடவியபடி "ஆஸ்பத்திரிக்கு யாராவது வருகிறீர் களா?" என்று கூவுவார். அவர் ஒரு ஐம்பது பேரை யாவது தினந்தோறும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்புவார். "