உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

216 66 கருணாநிதி 1 0 கொடி காட்டிய தோழர்களையும் பொதுமக்களையும் - காரி லிருந்து குதித்து கம்பெடுத்து விரட்டியடித்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் கவர்னர், தானே முன்னின்று தடியடி தர்பார் நடத்தும் விசித்திரத்தை சரித்திரம் முதன் முத லாக சந்தித்திருக்கிறது இந்த ஐந்து மாத காலத்திலே! ஜூலை 15ந் தேதிக்கு முன்னிருந்த கழகம் வேறு - அதற் குப் பிறகு உன்ன தமாக வளர்ந்திருக்கும் கழகம் வேறு! ஆயிரம் - லட்சமாக மாறிடும் விதத்திலே அவ்வளவு சிறப்பான எழுச்சி பெற்றிருக்கிறது. தி.மு.க. அவ தூறு பேசினாலும் ஆணவம் காட்டினாலும் அடித்து விரட்டினாலுங்கூட - அழிக்கமுடியாதது இவ் வளர்ச்சி எனக் கண்டபிறகுதான் கவர்னர் பிரகாசா - தஞ்சையிலே பேசும்போது-"கருங்கொடி நிகழ்ச்சிகள் பூஷ்யப் புரட்சி போலக் காட்சியளிக்கின்றன எனக கூறிவிட்டு நாகை யிலே பேசும்போது இவர்கள் வளர்ச்சியை அலட்சியம் படுத்தக்கூடாது " எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அலட் சியத்தாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று கருதி யிருந்திருக்கிறார்கள், இவர்கள் என்பதும் - இப்போது போர் முறையை மாற்றுகிறார்கள் என்பதும் - நாட்டுக்கு நன்கு புலனாகாமற் போகாது ! இ வைகளை யெல்லாம் எண்ணி மகிழ்கிறபோது சிறைச்சாலையின் துன்பங்கள் ஓடிவிட்டன. அது ஒரு சுகவாசஸ்தலம்' போலவே எங்களுக்கு இருந்தது. "நாம் சிறையிலிருக்கிறோம். வெளியிலே நமது கழகம் வளர்கிறது. நாம் பூட்டப்பட் டிருக்கிறோம் - வெளியே பல கிளைக் கழகங்கள் திறக்கப் படுகின்றன " என்ற மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அந்த சந்தோஷத்திலே நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. நவம்பர் மாதம் 21ம நாள் காலையிலே சிறைச்சாலையின் சிறிய கதவு திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு 6 ல