பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 27

"பொருளற்ற மக்கள் பொருள் பெற்ற மக்களிடம் சென்று இரப்பது இழிவு இல்லை என்று வருகிற அவர்களிடம் 'இல்லை’ என்று கூறுவது அதைவிட இழிவு' என்பது தமிழகத்தின் பண்பு.

ஒரு இடுகாட்டில் ஒரே நேரத்தில் இரு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைக் கண்ட ஒரு பெரியவர், "இவர் ஈத்துவக்கும் இன்பம் இன்னது என அறிந்து சுவைத்த செல்வர். இவர் அவ்வின்பம் எப்படி இருக்கும் என்பதையே அறியாது வைத்து இறந்த வறுமையாளர்' என்றார். பாவம் பணம் இழந்த பிணம்! -

தமிழ்ச்சொற்கள் அனைத்தும் பொருளமைதியுடையன. 'சுறுசுறுப்பு' என்பதும் "படபடப்பு' என்பதும் ஒன்றல்ல. அருஞ் செயல்களைப் பொழுதை வீணாக்காமல் அமைதி யாகச் செய்து முடிப்பவனே சுறுசுறுப்பாளன். அதிகமாய்த் துடித்து எதையும் செய்ய இயலாமல் துன்பப்படுகிறவன் . படபடப்புக்காரன். "சிக்கனம்' என்பதும் "கருமித்தனம்' என்பதும் இது போன்றதே. தேவைக்குமேல் செலவு செய்வது 'வீண் செலவு தேவையின் அளவு செலவு செய்வது "சிக்கனம். தேவைக்கும் செலவு செய்யாதது "கருமித்தனம்' இவற்றில் பொருட் செல்வம் பெறத் தேவையானது "சிக்கனம் ஒன்றே. - -

மாதம் 100 ரூபா வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூபா 10. அரிசி ருபா 15, பலசரக்கு ரூபா 15, காய்கறி ரூபா 8, பால் ரூபா 3. பலகாரம் ரூபா 3, எண்ணெய் ரூபா 5, விறகு ரூபா 5 வரட்டி ரூபா 2, விளக்கு ரூபா 2, துணி” துவைக்க ரூ. 3. சவரம் ரூபா 2, துணிக்காக ரூபா 3, இதர செலவுக்காக ருபா 7, மீதம் ரூபா 5 எனத் திட்டமிட்டுச் செவுவு செய்யவேண்டும் திட்டமில்லாத குடித்தனமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/29&oldid=956427" இலிருந்து மீள்விக்கப்பட்டது