பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ஆறு செல்வங்கள் -

குறிக்கோளில்லாத வாழ்க்கையும் ஒருபோதும் சீரடையாது. சிலர் இத்திட்டத்தையே தங்கள் இருப்பிடத்துக்கு ஏற்ற வாறும் குடும்பத்திற்கு ஏற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். திட்டமிட்டு வாழ்கை நடத்துகிறவர்கள் மீதப்படுத்த முடியாமற் போனாலும், கடன்காரர்களாக வாழமாட்டார்கள் என்பது உறுதியாகும்.

ஒருவனுக்குப் பொருள் வந்துசேருவது திடீரென வந்து விடாது. சிறுகச் சிறுக வந்து, பின் பெருஞ்செல்வமாகக் காட்சியளிக்கும். போகும்போது சிறுகச் சிறுகப் போகாது; ஒரேயடியாய்த் திடீரெனத் தொலைந்து போய்விடும்-ஒரு நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து, பெருங் கூட்டமாகக் காட்சியளித்துப் பின் ஒரேயடியாய்க் கலைத்து ஒழிந்து போய் விடுவதைப்போல.

பொருட் செல்வம் பெற விரும்புகிறவர்களுக்குச் "சிக்கனமும்', 'சேமிப்பும்' மட்டும் போதாது. அவர்கள் சேமித்த செல்வத்தைப் பாதுகாத்தும் ஆகவேண்டும். சேமிப்பு ஒரு கலை. சிக்கனம் அதன் துணைக்கலை. பாதுகாப்பதோ பெருங்கலை. 4.

பல ஆண்டுகள் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் இழந்துவிட்டவர் பலர். இவர்களிற் பெரும் பான்மையோர் நீண்டகாலம் உழைத்து, ஒய்வுபெற்று, உதவிநிதி பெற்றோர். உலகம் இன்னது என அறியாமல் உத்தியோகத்திலேயே உழன்று வாழ்ந்து வந்தவர்கள். உலகம் இன்னது என நன்கறிந்த வஞ்சக மக்களின் சொற் களில் ஏமாந்துவிடுவது இயல்பேயாகும். உதவி நிதி பெற்றோர் தாம் வாங்கிய தொகை அனைத்தையும் அன்றே ஒரு பெரிய வங்கியிற் போட்டு வைத்துப் பின் அத் தொகையை 5 பங்குகளாகப் பிரித்து 2 பங்கிற்கு விடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/30&oldid=956429" இலிருந்து மீள்விக்கப்பட்டது